பக்கம்:ஐந்திணை வளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 47 தன்னை வாடவிட்டு வராதிருக்கும் தலைவனின் செயலை எண்ணிச்சோர்கின்றாள். அந்தச் சமயத்திலே அவளுடைய ஆருயிர்த் தோழியும் அங்கே வருகின்றாள். அவளைக் கண்டதும் தலைவியின் அடங்கிக்கிடந்தசோகமெல்லாம் அணைகடந்த வெள்ளத்தைப் போலப் பொங்கிப் பெருகி வெளிப்பட்டு வருகின்றது. தலைவி தோழியிடம் தன்னுடைய நிலைமையை உரைக்கின்றாள். அவள் சொற்களிலே இழைந்தோடி வருகின்ற துன்பவெள்ளம் நம்மையும் துன்புற வைக்கின்றது. 'ஏனடி நின்வருத்தத்திற்கும் அளவில்லையோ? இப்படி அழுதழுது கரைந்தால் நின் உடல் எதற்கடி ஆகும்? மார்பெல்லாம் நீரால் நனைந்து விட்டதே? நீர்க்கோப்பு வேறா வரவேண்டும்? இப்படித்தலைவியைக்கடிந்துகொள்ளுகின்றாள் தோழி,உரிமையுடன். "தோழி நேற்று இரவெல்லாம் அசைதலற்று வானமும் மழைபெய்தலை விடாநின்றது. மையுண்ணும் என் கண்களும் முலைகள் மீது நீர் சொரிதலை விடாவாய் இருந்தன. "இந்த மாலை வேளையிலே, கற்கள் எழுந்து காணும் படியான காட்டுப் பகுதியின்கண்ணே, புதர்களிடத்தே, அழகுடன்கூடி முல்லையும் செம்முல்லையும் மலர்ந்துள்ளன, என் வாழ்வுதான் மலரவில்லை. இப்படிக்கூறுகின்றாள் தலைவி. அவள் துயரம் பிறரால் உணரமுடியாத பெருந்துயரம்: கல்லேர் புறவிற் கவினிப் புதன்மிசை முல்லை தளவொடு போதவிழ-எல்லி அலைவற்று விட்டன்று வானமும் உண்கண் முலைவற்று விட்டன்று நீர். "குன்றங்கள்பால் மழை இரவெல்லாம் பொழிய, அவையெல்லாம் மலர்களான் நிறைந்து அழகுற்றுத் தோன்றுகின்றன. என் முலைக்குன்றுகளின் மேலும் இரவெல்லாம் கண்ணிர் மழை பொழிந்தும், என் நெஞ்சத்தின் வெம்மையும் தணியவில்லை; என் வாழ்வும் மலரவில்லை. இப்படிக் கூறுகின்றாளோ தலைவி! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/55&oldid=761857" இலிருந்து மீள்விக்கப்பட்டது