பக்கம்:ஐந்திணை வளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - ஐந்திணை வளம் தீராத அவளுடைய இந்த வேதனை, வாழ்க்கையை வெறுத்துவிடுகின்ற அந்த அளவுக்கும் அவளைக் கொண்டு போய்விடுகின்றது. அவள் நெஞ்சம் நைந்து புலம்புகின்றாள். முடிவில், தன் உயிரை விளித்து, அவள் தனக்குத் தானே பேசிக் கொள்ளுதலையும் மேற்கொள்ளுகின்றாள். அந்தப்பேச்சு இது: போழ்வாய் இரும்புலி குஞ்சரங் கோள்பிழைத்துப் பாழ்நீர்ப் பொதியில் புகாப்பார்க்கும் ஆரிடைச் சூழாப் பொருணசைக்கட் சென்றோர்.அருள்நினைந்து வாழ்தியோ மற்றோ உயிர்? “எனது உயிரே! "பிளந்த வாயினை உடையது புலி. அது யானையைத் தனக்கு இரையாக்கிக் கொள்ள. நினைத்து, அதன் மேற் பாய்ந்தது. அந்த முயற்சியிலே அது வெற்றிபெற வில்லை. அதனால் அது பெரிதும் சோர்வுற்றது. மறவரது கொள்ளையிடலால் பாழ்பட்டுக் கிடந்த ஊரினதுமன்றத்தின் கண்ணே புகுந்து, உணவிற்கு வகை கிடையாதா என்று பார்க்கவும் தொடங்கிற்று. அப்படிப்பட்ட கொடுமையினை உடையது,நம் தலைவர் சென்றுள்ள வழி” என்பார்கள். "அத்தகைய இயல்புடைய பாலைவழியூடே, தாமும் போதலைத் துணிந்து, தம்முடைய பொருள் விருப்பினாலே சென்றிருப்பவர் நம் காதலர். அவர் திரும்பிவந்து அருளுதலை நினைந்து.நீயும் இவ்வுடலின் கண்பொருந்திவாழ்கின்றாயோ?” 'அவர் வருவது எளிதன்று; ஆதலின், என் உயிரே, நீ இன்னே இறந்துபடுக’ என்பது கருத்து. உயிரும் கசக்கின்ற சோகநிலை இது. 4. காணப் புணர்ப்பது மேற்கண்டவாறு தனக்குத்தானே தன்னுடைய உயிரினை வெறுத்துப் புலம்பிக் கொண்டிருந்த தலைவியைக் கண்டதும், அவளுடைய ஆருயிர்த் தோழி பெரிதும் மனவருத்தம் அடைகின்றாள். 'இவள் இப்படிப்பட்டவள் என்பதனை அறிந்தும், அவர் இவளைத் தனித்திருந்து புலம்புதற்கு விட்டுவிட்டுப்போயினரே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/64&oldid=761867" இலிருந்து மீள்விக்கப்பட்டது