பக்கம்:ஐந்திணை வளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 59 'ஊரிடத்தே பிறரைப் பழித்துப் பேசுதலிலே ஈடுபடுகின்ற பெண்களுக்குக் குறைவே இல்லை. அவர்கள் நம் களவினை அறிந்துவிட்டனர் என்றால், பழிச்சொற்களை அயராது மிகவும் எடுத்துப் பேசுவார்கள்.” 'மலையிடத்தே நாட்டப்பெற்றிருக்கும் கொடியினைப் பார். எவ்வளவு தொலைவுக்கு அதன் தோற்றம் பரவிநிற்கிறது. அதைப்போன்று வெற்றியுடன் நாற்றிசையும் பரவக் கூடியதன்றோ அந்தப் பழிச்சொற்களும்! இனி, யான் யாது செய்வேனோ? என்கின்றாள். - -- தலைவியது இந்த நிலைவிளக்கம் தோழியைப் பெரிதும் வருத்துகின்றது. அவள் உள்ளமும் வேதனை வெள்ளத்திலே சிக்குண்டு தத்தளிக்கத் தொடங்குகின்றது. பொறிகிளர் சேவல் வருமரற் குத்த நெறிதுர் அருஞ்சுரம்நாம் உன்னி-அறிவிட்டு அலர்ம்ொழி சென்ற கொடியக நாட்ட வலனுயர்ந்து தோன்று மலை. சேவல் என்றது காட்டுக் கோழியின் சேவலை, அது குத்திக்கிளைத்துப்போடுதல்காரணமாகவழிதூர்ந்துகிடக்கும் கடத்தற்கரிய சுரம் என்பது, நெறியினது கொடுமையைக் கூறியதாகும். நல்ல செய்திகள் மெல்லவே பரவக்கூடியன. ஆனால் பழிச்சொற்களோ மிக விைைரவில் நாற்றிசையும் பரவி விடும். இந்த உண்மையையும் நயமாகக் கூறுகின்றதுசெய்யுள். அதற்கு அஞ்சியதலைவியையும் நாம் காண்கின்றோம். 6. ஈரமற்ற நெஞ்சினர்! t தலைவன் ஒருவன் தன் தலைவியைப் பிரிந்து வேற்று நாடுகளுக்குச் சென்று பொருளிட்டிவருதலை நினைக்கின்றான். தன்பால் தலைவி கொண்டிருக்கின்ற பேரன்பினை அவன் அறிவானாதலால், அவனுடைய உள்ளம் பெரிதும் சஞ்சலப்படத் தொடங்குகின்றது. ஆதலால், தானே தன்னுடைய எண்ணத்தைத் தலைவியிடத்தே சொல்லக்கூடிய துணிவும் அவனிடம் எழவில்லை. மாறாகத் தான் சொன்னால் அவள் நிலை என்னாகுமோ என்ற கவலையே அவன் மனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/67&oldid=761870" இலிருந்து மீள்விக்கப்பட்டது