பக்கம்:ஐந்திணை வளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஐந்திணை வளம் படருகின்றது. என்னசெய்வதென்றுமயங்கிய அவன் உள்ளத்திலே, தலைவியினுடைய தோழியின் நினைவு எழுகின்றது. தோழி, பேச்சிலே மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் திறனைக் கொண்டவள். இதனை அவன் நன்றாகவே அறிந்தவன். ஆகவே, தலைவிக்குச் செய்தியை நயமாக எடுத்துக்கூறி, அவள் இசைவினைப்பெற்றுத் தருமாறு, அல்ன், தோழியை வேண்டிக்கொள்ளுகின்றான். o தலைவனது எண்ணத்தை அறிந்த தோழி, முதலில் ஆத்திரங் கொண்டனளானாலும், பின்னர், அவன் பொருள் தேடிவரப்போவது நியாயமானதே என்றும் உணர்கின்றாள். அதனால், தலைவிபாற் சென்று, தலைவனது நிலையைக் கூறி, அவளை அமைதியுற்றிருக்கச் செய்தற்கும் தொடங்குகின்றாள். 'தோழி! நின் தலைவர் நின்னைப் பிரிவதற்கு மனமில்லாது இருக்கின்றார். என்றாலும், பொருள் தேடிவரப் போகாதிருப்பின், அது தனக்கும்நினக்கும் இழிவுடையதாகவே ஆகிவிடலாம் என்றும் அஞ்சுகின்றார். ! --- - , 'மேலும், பொருள் இல்லாது. வாழ்வு செழுமை உறுவதில்லை. இந்த உண்மையினையும் நீ அறிவாயன்றோ! ஆகவே, ஆண்மையாளராகிய அவர்,அறிவோடு மேற்கொள்ளு கின்ற இந்தச் செயலுக்கு இசைவுதந்து ஊக்கியிருப்பதுதான் நமக்கு.அழகாகும். அதனால், அவரைப்பிரிந்து நாம் துயருறுதல் நேரலாம். அதனையும், அடுத்து வருகின்ற புகழமைந்த வாழ்வினை மனங்கொண்டு ஆற்றியிருத்தலே வேண்டும். அதுவே, நாம் செய்ய வேண்டுவது என்கின்றாள். இப்படிப் பக்குவமாகவே தலைவியின் மனத்திலே படுமாறு தோழி நயம்படச் செய்தியைக் கூறினாலும் தலைவியின் உள்ளம் அதனால் மிகவும் புண்பட்டு வருந்துதலையே கொள்ளுகின்றது. காதற்செறிவினாலேகவியப் பெற்றிருக்கின்ற அவளுடைய உள்ளத்திலே, அந்த இன்ப நினைவும், அதனை நிலையாகப் பெறுதற்குத் தலைவன் தன்னருகேயே எப்போது இருக்க வேண்டும் என்ற ஆர்வமுந்தான் மேலோங்கி நின்றதே அல்லாமல், உலகியல் நினைவுகள் எதுவுமே எள்ளளவும் எழவில்லை. அவள் உள்ளக் குமுறலை அவள் வாய்மொழியாகவே நாமும் காண்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/68&oldid=761871" இலிருந்து மீள்விக்கப்பட்டது