பக்கம்:ஐந்திணை வளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 71 பூங்கண் இடமாடும் கனவும் திருந்தின ஓங்கிய குன்றம் இறந்தாரை, யாம்நினைப்ப வீங்கிய மென்தோள் கவினிப் பிணிதீரப் பாங்கத்துப் பல்லி படும். .” தோழியின் உரைகள் தலைவியின் உள்ளத்தும் நம்பிக்கையைத் தோற்றுவிக்க அவளும், அதன்மேல் தன் கவலையினை மறந்து, தலைவனின் வரவினை எதிர் நோக்கிய இன்பக் கனவுகளிலே ஈடுபட்டனள். அந்த மாற்றத்தை அறிந்த தோழியும் கவலை நீங்கிக்களிப்புற்றனள். பாங்கம்-பக்கம் 14. நடந்து செல்வாளோ? களவுறவிலே ஈடுபட்டுத் துய்த்துக் களித்த தலைவியொருத்தி, தன் காதலனின் நினைவாகவே இருக்கின்றாள். அவளுடைய அந்த மாற்றத்தை உணர்ந்து, அவளுடைய மணவினைக்கு ஏற்பாடு செய்வதிலே கருத்தைச் செலுத்துகின்றாள் தாய். தந்தையுடன் பேசி அதற்கான முடியினைச் செய்யுமாறும் தூண்டுகின்றாள். அவளுக்கான நல்லிளைஞனை அவர்கள் குறிப்பிட்டு அவனுக்கு அவளை மணஞ்செய்விக்கவும் முடிவு செய்கின்றனர். - இந்த நிலையிலே தலைவனும் தலைவியும் தவிக்கின்றனர். தலைவி கற்புடையவள் அதனால் அவள், தன் காதலனுடன், தன் வீட்டைவிட்டு வெளியேறிச்செல்லுவதற்கும் நினைக்கின்றாள். ஒரு நாள் இரவிலே அவள் எண்ணம் செயலாக மலர்கின்றது. அவள் தன் காதலுக்கு உரியவனோடு கூடியவளாகச் சென்று விட்டாள். மறுநாட்பொழுது புலர்ந்ததும், தன் மகளைக் காணாத தாய், மனவேதனையாலே துடித்துப் புலம்புகின்றாள். "என் மகள் பேதைமை கொண்டவள். அவள், அரி அமைந்ததன் காற்சிலம்புகள் ஒலி முழங்கவும், மெல்லியவான விரல்கள் சிவப்பினை அடையவுமாகச்,சிறுகற்கள் மேலெழுந்து தோன்றியவையாய்க் கிடக்கின்ற பாலைநில வழியினுடே நடந்தும் செல்வாளோ? அல்லது,இவ்வழிச்செல்வதற்கு எம்மால் இயலுவதன்று எனக்கூறி ஏங்கி வாடி, ஒரு பக்கமாக இருந்தும் விடுவாளோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/79&oldid=761883" இலிருந்து மீள்விக்கப்பட்டது