பக்கம்:ஐந்திணை வளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஐந்திணை வளம் கொல்லுங் களிற்றினைப் போன்ற தன் காதலனின் பின்னாகச் சென்றவள்தான் யாது செய்வாளோ? இவ்வாறு,தன் மகளை நினைந்துவருந்திவாட்டமுற்றுச் சோர்கின்றாள், தலைவியின் தாய். தன் மகள் தன்னையும் மறைத்துத் தலைவனுடனே உடன் போக்கிற் சென்ற அந்தச் செயலுக்கு அவள்மீது சினங் கொள்ளாது. அவள் நலமாகக் கடந்துசெல்லவேண்டுமே என்று வழியை நினைந்து வருந்தும் தாய்ப்பாசத்தை இச்செய்யுள் அருமையாக எடுத்துரைக்கின்றது. ஒல்லோமென்று ஏங்கி உயங்கி இருப்பாளோ? கல்லிவர் அத்தம் அரிபெய் சிலம்பொலிப்பக் கொல்களிறு அன்னான்பின் செல்லுங்கொல்

  • என்பேதை மெல்விரல் சேப்ப நடந்து. 'அரி என்பது சிலம்பின் உள்ளீடாகப் பெய்கின்ற பரல்களை, ஒல்லோம்-யாம் இயலோம், உயங்கி-வாடி, பாலையின் ஏதத்தை நினைந்து புலம்பியதனால், இதனையும் பாலையென்றே கொண்டனர்.

இந்தச் செய்யுள் பழைய காலத்திலே தமிழ்க் குடியினரிடை நிலவிய ஒர் ஒழுக்க மரபினை நமக்குக் காட்டுகின்றது. பொதுவாகக் குடும்பங்களிலே தம் மகளுக்குத் தாமே ஏற்றதொரு மணமகனைப் பார்த்து மணமுடித்து வைப்பதுதான், அன்றும் வழக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இயற்கையோடு கலந்து வாழ்வியல் அமைந்துநின்ற காரணத்தால், கன்னியரும் இளைஞரும் தம்முள் தனித்துக் காணுதற்கும், காதலுற்றுக் களவிற் கூடிக் களித்தற்கும் வாய்ப்புக்கள் இருந்தன என்றாலும் அந்த உறவு சான்றோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக விளங்கவில்லை. காதலர்கள் தமக்குள் கடிமணம் பூண்டதன் பின்னர்த்தான் அவர்களைச் சான்றோர், கணவன் மனைவியராக ஏற்றுக் கொண்டனர். இதனால், பொதுவாகத் தாய்மார், தம் மகள் களவுறவிலே ஈடுபடுவதனைத் தடுப்பதிலே தான் கவனஞ் செலுத்தி வந்தனர். தம்மகள் அவ்வாறு ஒழுகமாட்டாள் என்ற நம்பிக்கையுடன் விளங்கியவராகவே தாய்மார் விளங்கினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/80&oldid=761885" இலிருந்து மீள்விக்கப்பட்டது