பக்கம்:ஐந்திணை வளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - - 73 எனினும்,இயற்கைசதிசெய்து விடுகின்ற போது, அவர்கள்மனம் கலங்குகின்றனர்.அப்பொழுதும்,அது தம்மகளின் பருவநினைவு என்றுதான் எண்ணித் தக்கதொரு மணவாளனைத் தேடுவதில் ஈடுபடுகின்றனர். களவுறவினைத் தாய் அறியின் தன்னைக் கடிந்து கொள்வாள் என்றறிந்தும், தலைவி தன்னை மயக்கிய காதல் வலையிலே, தன்னையும் அறியாதேயே சிக்கிக் கொண்டு விடுகிறாள்.கற்புடைய அவள், தன் காதலனையன்றிப்பிறனுடன் மணந்து வாழ்தற்கு இசையாள். ஆகவே, அவனுடன் உடன்போக்கிற் செல்லுதலையும் மேற்கொள்ளுகின்றாள். - தன் மகள் சென்ற பின்னர் தாயின் உள்ளத்திலே பாசப் பெருக்கந்தான் நிரம்பி வழிகின்ற்து. மகளைக் குறை கூறவோ, அல்லது அவளை அழைத்துப் போகும் இளைஞனைக் குறைகூறவோ அவள் கருதினாளில்லை. தன் மகள் காட்டு வழியை எப்படிக் கடப்பாளோ? என்ற கவலைதான் அவளை ஆட்கொள்ளுகின்றது. . - தாய்மையின் இந்த அம்சத்தை, இச்செய்யுள் நமக்கு மிகத் தெளிவாக விளக்கி நிற்கின்றது. இதனை நாம் அறிந்து போற்றுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/81&oldid=761886" இலிருந்து மீள்விக்கப்பட்டது