பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலா வந்த பெருமான் 41

இறைவனுக்குத் தினந்தோறும் நடைபெறும் பூசனேக்கு நித்தியம் என்று பெயர். கித்தியம் அல்லாமல் விசேஷ காலங்களில் விகழும் திருவிழா முதலியவற்றிற்கு நைமித்திகம் என்று பெயர். மனத்துக்கு எட்டாத கடவுள் புறக் கண் ணுக்குத் தோற்றும் உருவத்தை எடுத்துக் கொண்டு திருக்கோயிலிலே எழுந்தருளியிருக்கிருன். அந்த மூர்த்தியைத் தரிசிக்க வேண்டுமானல் அவன் இருக்கும் கோயிலுக்குச் சென்று காணவேண்டும். அங்கே சென்று அவன் கோயிலே வலம் வரவேண்டும். ஒரளவு முயற்சி இருந்தால் ஒழிய வீட்டில் உள்ள மக்கள் கோயிலுக்குப் போக முடியாது. பக்தர்கள் எங்கெங்கே கோயில்கள் உண்டோ அங்கே எல்லாம். தேடிச் சென்று, எத்தனே து.ாரமாக இருந்தாலும் அதை அடைந்து, வலம் வந்து போற்றி வணங்குகிருர்கள். ஆனல் இறைவனேக் காண வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத மக்கள், அவனுடைய கோயில் மிக அருகில் இருந்தாலும் கூடப் போவது இல்லை. பணத்துக்காகவோ புகழுக்காகவோ சில காவதங்கள் கடந்து செல்வதற்குச் சித்தமாக இருக்கின்ற அந்த மக்கள் இறைவனே கினைந்து ஒரு தெருவைக் கடந்து போய் அடுத்த தெருவில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட மாட்டார் கள். அத்தகைய சோம்பேறிகளே ஆட்கொள்ளுவதற்குக் கூட இறைவனுடைய திருவருள் விரிகிறது.

தினந்தோறும் பூசை முதலியவற்றை ஏற்றுக்கொண்டு திருக்கோயிலிலே மூல மூர்த்தியாக எழுந்தருளியிருக்கின்ற ஆண்டவன் உற்சவ மூர்த்தியாக விசேட காலங்களில் வீதியில் எழுந்தருளுகிருன். அப்படி எழுந்தருளுவதற்கு உரிய விதிகளைப் பெரியோர்கள் அமைத்திருக்கிருர்கள். கோயிலிலே இருக்கிற மூர்த்தியைக் காட்டிலும் வெளியிலே உலவுகின்ற உற்சவ மூர்த்தி மிகவும் அழகாக இருப்பதைக் காணலாம். விழாவில் தான் விசேஷ ஆடம்பரங்கள்

4