பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கஞ்சியிலும் இன்பம்

பூசாரி வரங் கொடுக்கவில்லை” என்று பழமொழி சொல்வதைக் கேட்டதில்லையா?

தொழில் செய்வார் கூட்டத்தில் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் செய்யவேண்டுமானல் முறைமைப் பிள்ளே யாரேனும் இருப்பான். அத்தை மகனைக் கொள்வது ஒரு வழக்கம். ஏதாவது காரணத்தால் அவனுக்குப் பெண்ணைக் கொடுக்க இயலாவிட்டால் இரண்டு குடும்பங்களுக்கும் பெரிய சண்டை வந்து விடும். கல்யாணம் நடவாமல் தடுப்பதற்கு உரிய காரியங்கள் எல்லாம் செய்வார்கள். இத்தகைய சண்டையால் மனமகனே பிணமகனாய், மணப்பறையே பிணப்பறையாய் முடிந்த கல்யாணங்களும் உண்டு.

வேறு வகையிலும் கல்யாணம் நடவாமல் செய்ய முயலும் விரோதிகள் இருப்பார்கள். ஆகவே, கல்யாணம் என்றால் அதுவும் சத்துருவை வென்று நிறைவேற்றும் போராட்டமாகவே நேரும். மனிதர் துணையோடு தெய்வத்தின் துணையையும் வேண்டிப் பூசாரியை அழைத்துப் பூசை, போட்டு உடுக்கடிக்கச் சொல்லிக் கேட்பார்கள். பூசாரி தைரியமூட்டும் பாடல்களைப் பாடுவான். அவனுடைய தொனியே அச்சத்தை நீக்கித் தைரியத்தை உணடாக்கும்.

ருதமலை வீரப்பனைப் பூசாரி, பெண்ணுக்கு மணமுடிக்க வேண்டி அழைக்கிறான். பாட்டு, பின் பாட்டு, இடையிடையே உடுக்கின் ‘பிம் பிம் பிம், பிம் பிம் பிம்’ என்ற முழக்கம் இனங்களின் ஆரவாரம் எல்லாம் சேர்ந்து அந்த இடத்தை ஒரு போர்க்களரியைப் போலத் தோற்றச் இசய்கின்றன.

பூசாரி பாடத் தொடங்குகிறான்.