பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31

அந்நேரத்தில்தானு, அல்லது அனுபவித்த அந்தக் காலத்தைப் பற்றிப் பின்னர் எண்ணிப் பார்த்தபோதுதானுே-என் வாழ்நாளில் ஒரு பொழுது கூட மறித்துவிட முடியாத ஒற்றைத் தனி உணர்ச்சியை நான் எப்போது அனுபவித் தேன்; அதை என்னுல் சொல்ல முடியவில்லை.

நேற்று நடந்தது போல் தெளிவாகத் தோன்றுகிறது: இதோ என் தந்தை படகின் பக்கங்களைப் பற்றிக் கொண்டு அவரிருத்த க நிலையிலே, நீண்டு கிடந்த வலுவற்ற கைகளைக் காண்கிறேன். அவரது தொப்பி அலையோடு போய்விட்டது. அலைகள் இதோ வலப்புற மிருந்து, அதே இடது பக்கத்தி லிருந்து, முன்னும் பின்னுமிருந்து கிளம்பி அவர் தலையிலும் தோள்கள் மீதும் மோதின. ஒவ்வொரு முறையும் அவர் தன் தலையை ஆட்டுவார்; பலமாகத் தும்முவார்; என்னை நோக்கிக் கத்துவார். உடல் முழுதும் கனைநது உட்கார்ந் திருந்த அவர் அளவிலே குறுகிப் போனது போல் காட்சி தந்தார். பயத்தினுல் பெரிதாகி யிருந்தன அவர் கண்கள். ஒருவேளை, வேதனை காரணமாகவும் இருக்கலாம். வேதனை யால் தானிருக்கும். நான் அப்படித்தான் கினைக்கிறேன்.

'கவனி. நான் பேசுவது கேட்கிறதா?’ என்று கத்து வார் அவர்.

சிலசமயம் நான் பதிலளிப்பேன்.

'நான் கேட்டுக் கொண்டு தானிருக்கிறேன்.'

'நினைவில் நிறுத்து, நன்மைகள் எல்லாம் மனிதனிட மிருந்தே பிறக்கின்றன.'

'நான் ஞாபகம் வைத்துக் கொள்வேன்’ என்பேன்.'

நிலத்திலிருந்த போது ஒருநாள் கூட அவர் அப்படிப் பேசியதில்லை. சதா அவர் சங்தோஷமாகவும் அன்பாகவும் கடந்து வந்தார். வேடிக்கை நினைவுடனும் நம்பிக்கை யின் மையோடும், என்றுமே நான் சின்னப் பிள்ளை என்ற எண்