பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

27


ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் மருந்து வாடையே வீசிக்கொண்டிருந்தது. வயிற்றுப் பிரச்சினைக்காக இருந்த பணமெல்லாம், வைத்திய செலவுக்காகப் போயிற்று.

இவ்வாறு, ஒருவர் மாற்றி ஒருவர் என்றவாறு, எல்லா குழந்தைகளும் விஷக் காய்ச்சலில் படுத்துப் படுத்து எழுந்தன.

பணக் கஷ்டம் ஏற்படும் பொழுதெல்லாம், தருமலிங்கத்தினிடம் பணம் பெற்றுக் கொண்டார். எத்தனை முறை கேட்டாலும் மனம் சலிக்காமல், கோபப்படாமல், கேட்ட பணத்தைக் கொடுத்து வந்தார் தருமலிங்கம். அந்த மாதிரி ஒருவர் ஆதரவு இருந்தது. நடேசனுக்கு நல்ல காலம் என்றே சொல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கெல்லாம் வந்த காய்ச்சல் போய்விட்டதென்று நடேசன் நினைத்தபொழுது, ‘அதற்குள் போய் விடுவேனா’ என்று கூறுவது போல, பார்வதியை காய்ச்சல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

ஏற்கெனவே இளைத்துப் போயிருந்த பார்வதி, குழந்தைகள் காய்ச்சலால் கஷ்டப்பட்டபோது இரவு பகல் பாராது கண் விழித்தாள். அதனால் மீண்டும்