பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

39


கரும்புகள் ‘மடமட’ வென்று முறிவதுபோல் சத்தம் தூரத்தில் கேட்கத் தொடங்கி, இப்பொழுது அவருக்கு மிகவும் அருகாமையிலே கேட்கத் தொடங்கியது. அத்துடன், சரசரவென்ற கரும்பு சரகுகளின் ஒலியுடன், யாரோ வேகமாக பின்னால் நடந்துவரும் சத்தமும் கேட்டது.

‘மனிதர்கள்தான் அவசரமாக வருகிறார்கள் போலிருக்கிறது’ என்று எண்ணித் திரும்பினார் நடேசன்!

என்ன பயங்கரம்! தீப்பந்தயம்போல இரண்டு கண்கள் மின்னின. தரை அதிர்வதுபோல கால்களைத் தூக்கி வைத்துக் காலடி போடுகின்ற தன்மையில், புலி ஒன்று அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

'புலி! இங்கே, இந்த ஊருக்கு எப்படி வந்தது? என்று எண்ணக் கூட நேரமில்லை நடேசனுக்கு. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடத்தொடங்கினார்.

புலியிடம் ஓட்டப் பந்தயமா?

பயங்கரமாகப் பாய்ந்தது புலி. நடேசனைத் தாக்கியது. தப்பித்து ஓடமுயன்ற நடேசன் இடுப்பிலே ஓங்கி அறைந்தது. ஒரே அறைதான்.

‘ஐயோ செத்தேன்’ என்று கீழே விழுந்தார் நடேசன். புலியின் ஒரே அறையில் மயக்கமடைந்து