பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அன்புடன் கேட்டுக் கேட்டுப் பார்த்தபொழுது, சரியான பதில் தரவில்லை அவரது மனைவி பார்வதி. ஆத்திரத்துடன் கேட்டபோதுதான், அவள் தடுமாறிக் கொண்டே பதில் சொன்னாள்.

‘நேற்று மாலையே பேரூருக்குப் போய், உடனே திரும்பி வந்துவிடுகிறேன் என்று போனவர்தான். இன்னும் வீடு வந்து சேரவில்லை. நீங்கள்தான் அவரைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும். அவருக்கு ஏதோ ஆபத்துதான் வந்திருக்கிறது’ என்று அழவும் தொடங்கி விட்டாள்.

தங்கள் தாய் அழுவதைக் கண்டு, எல்லாக் குழந்தைகளும் ஏக காலத்தில் சத்தம் போட்டு அழத் தொடங்கின. தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்கியதுபோல கூச்சல்.

அவர்களை சமதானம் செய்து, மீண்டு வருவதற்குள் தருமலிங்கத்திற்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. உடும்பு பிடிக்கப்போய் கையை விட்டால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்.

அவர் மனதிலே எப்படியோ சிறு சந்தேகம் அரும்பத் தொடங்கியது.

அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து, தன் மனைவி மீனாட்சியை அழைத்து, நடேசன் தந்த