பக்கம்:கடவுள் பாட்டு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

விண்ணை அண்ணாந் தளக்கின்றேன்
வேகஞ் செலுத்திப் பார்க்கின்றேன்
அண்ணல் உன்னை மிஞ்சுவதோர்
ஆற்றல் இன்மை அறிகின்றேன்.

199

குறியும் நெறியும் அற்றவர்க்கோர்
கொள்கை நல்கித் திருவுடைய
அறிஞராக்கும் பெருமானே
அகத்தை யாளும் அருளாளா
வறிய ராக உழல்கின்ற
மனிதர்க் கெல்லாம் நல்வாழ்வு
செறிய வாதை தீர்ந்திடவே
செய்வாய் இன்பஞ் சேர்ந்திடவே.

200


வெற்றுத் தாளில் தூரிகையால்
விந்தைக் காட்சி பலபடைக்கும்
கற்றுத் தேர்ந்த ஒவியன்போல்
கணக்கில் லாத அண்டங்கள்
அற்றுத் தோன்றும் பாழ்வெளியில்
ஆக்கிப் படைத்த பெருமானே
உற்றுப் பார்த்தால் தான்தெரியும்
உருவத் தென்றன் உளம்புகுவாய்!

201


எங்கும் நிறைந்த பேரொளியே!
எல்லாம் வல்ல பெருநிதியே
தங்கும் அருளின் வாரிதியே! .
தனக்கு நிகரில் லாதவனே!
அங்கும் இங்கும் தேடாமல்
அகத்தில் உணர்வாய் நிறைவோனே!
தங்க மணியே! என்தெய்வத்
தமிழே உன்னை வணங்குகிறேன்!

202
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/66&oldid=1211799" இலிருந்து மீள்விக்கப்பட்டது