பக்கம்:கடவுள் பாட்டு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63


அடுக்க டுக்காய் அண்டங்கள்
அவற்றிற் பலவாம் உயிரினங்கள்
தொடக்கம் செய்வாய்; காத்திடுவாய்:
தோன்றிய தெல்லாம் காலத்தே
ஒடுக்கம் கொள்ளச் செய்திடுவாய்:
உன்றன் தொழிலோ பெரிதையா,
உடுக்கும் உடைக்கும் சோற்றுக்கும்
ஒடுந் தொழிலே என்தொழிலாம்!
196
வேட்டு வேட்டுப் பாடியுனை
விருப்ப மெல்லாங் கூறிவிட்டேன்
கேட்டுக் கேட்டுப் புகன்றதெலாம்
கிட்டப் புரிவாய் பெருமானே
நாட்டங் கொண்ட தெய்துமுனே
நாளுங் கழிந்து போவதனால்
கேட்ட கேட்ட வப்பொழுதே
கிட்ட வேண்டும் பெருமானே!
197
பாடிப் பாடித் தொழுவதெலாம்
பயனுண் டாக வேண்டுமெனில்
ஆடி ஆடி உலகத்தை
ஆட்டிப் படைக்கும் தலைவாநீ
கூடிக் கூடி என்னோடு
குழைந்து குழைந்து கலந்திடுவாய்
நீடி நீடி இன்பமுற
நின்றன் துணையே வேண்டுமையா!
198
கண்ணைத் திறந்து பார்க்கின்றேன்
காதைத் தீட்டிப் பார்க்கின்றேன்
எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன்
எங்கும் ஆய்ந்து பார்க்கின்றேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/65&oldid=1211797" இலிருந்து மீள்விக்கப்பட்டது