பக்கம்:கண்ணகி தேவி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்ரீ:

கண்ணகிதேவி

புகார் நகரச் சிறப்பு

நம் தமிழ் நாடானது பண்டைக்காலத்தில் சேர நாடு, சோழநாடு, பாண்டி நாடு என மூன்று பிரிவினதாய்ச் சேரர், சோழர், பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர் மூவராலும் ஆளப்பட்டு வந்தது. சோழநாடு, கோடைகாலத்திலும் வெள்ளப் பெருக்குக் குன்றாத பொன்னி என்னும் காவிரியாறு பல கால்களாய்ப் பிரிந்து பாய்தலால், கன்னலும் செந்நெல்லும், இஞ்சியும் மஞ்சளும், வாழையும் கமுகும், தெங்கும் பலாவும், வயல்கள் எங்கும் செழித்து வளர்ந்து நிலமடங்தையின் நெற்றியிலிட்ட திலகம் போல விளங்கும். மருதநிலத்தூர்களின் அருகிலெல்லாம் கரும்பாலைகளும் நெற்கூடுகளும் கவின் பெற விளங்கும். காவிரி தன் தாயகமாகிய குடக மலையினின்றும் பல்வகைப்பொருளையும் ஏந்திக்கொணர்ந்து சொரிதலால் மலைவளமும்,கீழ்த்திசையில் கடல் சூழ்ந்திருப்பதால் கடல் வளமும் உடையதாகும் இந்நாடு. எந்நாட்டினும் இந்நாட்டின் நெல் மிகுதி பற்றி இதனைப் புலவரெல்லாம் ‘சோழ வளநாடு சோறுடைத்து,’ எனப் புகழ்ந்து பேசுவர்.

இந்நாட்டில், இசையால் திசையெல்லாம் அறிந்து, போக புண்ணியங்களால் வசையின்றிப் பொலிந்து விளங்குவது பூம்புகார் என்னும் பட்டினம். இது காவிரி கடலோடு கலக்கும் சங்கமுக மென்னும் துறையில் அமைந்திருப்பதால் காவிரிப்பூம் பட்டினம் எனவும், ககந்தன் என்பான் ஆண்டமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/9&oldid=1407958" இலிருந்து மீள்விக்கப்பட்டது