பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் நீதியைச் சொன்னார். அதுபோலவே நம்முடைய உள்ளத்தில் பயம் தோன்றாமல் இருப்பது இயற்கை அன்று. ஆனால் உண்டாகும் பயத்தை வளரவிட்டால் அதனைப் போக்குவதற்கு ஏதேனும் உபாயத்தைப் பின்பற்றலாம். மரண பயத்தைப் போக்குவதற்கு மரணத்தை வெல்லுகின்ற நெறியில் நடக்க வேண்டும். மரண பயத்தைப் போக்குவதற்கு இறைவன் இருக்கிறான் என்று நிச்சயபுத்தி வேண்டும். மரணம் வருமே என்று பொதுவாக நினைப்பதைக் காட்டிலும் யமன் வருவான் என்று உருக்கொடுத்து நினைப்பது எளிது. அந்த யமனுக்கு யமனான ஆண்டவன் திருவருள் கிடைக்கும் என்று கற்பனை செய்வதும் எளிது. ஒன்றை ஒன்று மாற்றிவிடும். இதற்காகத்தான் எம்பெருமான் திருவிளையாடல்களை நாம் படித்துச் சிந்தித்து வருகிறோம். யமனை வெல்லுதல் மரணத் துன்பம் கண்ணாலே காண முடியாதது. நுட்ப மானது. அதற்குப் பருப்பொருளாக ஒர் உருவத்தைக் கொடுத்துத் திரிசூலமும் பாசக் கயிறும் தாங்கி, எருமைக் கடாவின் மேல் யமன் வருகிறான் என்று எழுதி இருக்கிறார்கள். ஆண்டவன் அருள் இருக்குமானால் அவனைக் கொன்று வீழ்த்தலாம் என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள். - "யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால்" என்று கூறுவார் தாயுமானவர். 'நான் யமனைக் கொன்று விட்டேன் என்று அடுத்தடுத்து நினைத்தால் அது மெய்யாகப் போய்விடும். ஆனால் அந்தத் தைரியம் நமக்கு வரவேண்டு மானால் நாமும் ஒரு பலத்தைக் கொள்ள வேண்டும்; ஒரு பெரும் துணையைப் பற்றிக் கொள்ள வேண்டும். அந்தத் துணைதான் இறைவன். அருணகிரியார் அத்தகைய பலம் ஒன்று உண்டென்று இங்கே நினைப்பூட்டுகிறார். 'முருகப்பெருமானுடைய திருக்கரத்தில் உள்ள சத்திவாள் கிடைத்திருக்கிறது; அதனால் நான் யமனை வெட்டி வீழ்த்தி விடு வேன்' என்று கூறுகிறார். யமன் வருவான் என்ற நினைவோடு மயில்வாகனப் பெருமானது சத்திவாள் நமக்குக் கிடைக்கும் 1Ο5