பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 என்ற எண்ணமும் நமக்கு இருந்தால் பயம் போய்விடும். அருண கிரிநாதர் கால பயம் போவதற்குப் பல பாடல்களை வெவ்வேறு வகையில் சொல்லியிருக்கிறார். காலனால் வருகிற அச்சத்தை நினைப்பூட்டி, அதனைப் போக்குவதற்கு இறைவனுடைய அருள் பயன்படும் என்பதையும் அழுத்தமாகப் பாடுகிறார். அத்தகைய பாடல்களுள் இப்போது பார்க்கும் பாடலும் ஒன்று. அருணகிரியாரின் உறுதி காலன் என்ற ஒரு பாவி வருவான். அவன் மிகப் பொல்லாதவன். நம்மிடம் வந்து தொந்தரவு செய்வதற்கே அவன் வருகிறான். யாவருக்கும் அஞ்சாத பேர்வழி அவன். அத்தகைய வன் ஒரு பக்தனிடம் சென்று வாலாட்டினான். அவனை அறுத்துக் கொன்றுவிட்டார் ஒரு பெரியவர். அந்தப் பெரியவருக்கு அந்தத் தைரியம் எப்படி வந்தது தெரியுமா? அத்தகைய தைரியத்தை அவருக்கு ஒரு பிள்ளையாண்டான் அளித்தான். அவர் கையில் வாள் ஒன்று கொடுத்து அந்த வாளினால் அத்தகைய தைரியத்தைப் பெறும்படி செய்தான். அந்தப் பிள்ளையை நான் தேடிச் சென்று என்னுடைய துன்பத்தைப் போக்க வேண்டுமென்று இறைஞ்சி னேன். எனக்கும் ஒரு சக்தி வாள் கொடுத்தான். நான் இப்போது வலிமை உடையவன் ஆகிவிட்டேன். அந்தக் காலன் என்னிடத்தில் இப்போது வருவானா?” என்று அறைகூவுகிறார் அருணகிரியார். "தந்தைக்கு முன்னம் தனிஞான வாள்.ஒன்று சாதித்தருள் கந்தச்சுவாமி எனைத்தேற் றியபின்னர்க் காலன்வெம்பி வந்திப் பொழுதுஎன்னை என்செய்ய லாம்? சத்தி வாள் ஒன்றினால் சிந்தத் துணிப்பன் தணிப்பரும் கோபத்ரி சூலத்தையே. கலக்கமும் தெளிவும் தேற்றுதல் - தெளிவு பெறச் செய்தல். தெளிவுக்கு மாறுபாடு கலக்கம். மனிதன் பிறந்துவிட்டால் பிறப்பாகிய துன்பத்திற்கு உட்பட்டுப் பல பல கலக்கங்களை அடைகிறான். பிறரால் துன்பம் நேருமே என்று நினைக்கும் போது கலக்கம் உண்டா கிறது. தான் செய்த காரியங்கள் நல்ல பலனைத் தராதபோது கலக்கம் உண்டாகிறது. 'இத்தகைய பலவகைக் கலக்கங்கள் 1 CE