பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் உடையவனாக நான் இருந்தேன். கந்தசாமிக் கடவுள் என்னைத் தேற்றினான். நான் தெளிவு பெற்றேன். அதற்கு முன்பு நான் இருந்த அவலநிலை மாறியது. இப்போது நான் எதற்கும் அஞ்ச வில்லை' என்பது அருணகிரிநாதருடைய அநுபவம். இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கு முன்னால் நாம் நம்முடைய வலிமை காரணமாக எந்தத் துன்பம் வந்தாலும் போக்கிக் கொண்டு விடலாம் என்ற தைரியத்தோடு இருக் கிறோம். தம்மோடு வாழ்கிறவர்களை வெட்டுவதும், குத்தவது மாக உடல் பலத்தைக் கொண்டு சிலர் வாழ்கிறார்கள். இத்தனை வீரமும் காலனுக்கு முன்னால் செல்லாது. ஆயிரம் ஆயிரம் மக்களைக் கொன்று குவிக்கின்ற பெருவீரம் உடையவர்களையும் கொன்று குவித்து விடுகிறான் காலன். உலகத்திலுள்ள அத்தனை பேரையும் அவரவர்களுக்குரிய நாளில் அவன் வெட்டிச் சாய்த்துக் கொண்டு வருகிறான். அவனைக் கண்டு அஞ்சிய மக்கள் பலர். வெறும் வாய் வீரமும், வல்லமையும் அந்தக் காலனிடத்தில் செல்லா. அவனைக் கண்டு அஞ்சுகின்ற கூட்டத்தில் இறைவ னுடைய அருளைப் பெறாதவர்கள் சேருகிறார்கள். திருவருளைப் பெற்றுவிட்டாலோ காலனால் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை என்ற உறுதிப்பாடு வந்துவிடும். - நமக்கு வரும் துன்பம் இன்னது என்று முறைப்படி தெரிவது இல்லை. வறுமையினால் துன்பம், நோயினால் துன்பம், பிறருடைய நலிவினால் துன்பம் என்று பல துன்பங்கள் நமக்கு உண்டாகின்றன. இவை அல்லாமல் பிறன் வாழ்வதைக் கண்டும் சிலருக்குத் துன்பம் உண்டாகிறது; இதற்குக் காரணம் பொறாமை. வேறு ஒருவன் புகழ் உடையவனாக இருந்தால் நமக்குப் புகழ் கிடைக்கவில்லையே என்று மனம் கலங்குகிறது. இந்த வகை யில் நமக்கு ஏற்படும் துன்பங்களும், கலக்கங்களும் எல்லை காணாதவை. காலன் வருவான் என்ற துன்பம் எல்லோ ருக்கும் நன்றாகத் தெரியும். துன்பமும் மாற்றும் நமக்கு வருமோ வராதோ என்று நினைத்திருக்கிற துன்பங் களுக்கு எல்லாம் மாற்றாகப் பல வலிமையுடைய பொருளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். வறுமைத் துன்பத்திற்கு மாற்றுப் 107