பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வேலும் மயிலும் நமக்கு நிழல் தந்து, கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சி தருவது ஆண்டவன் வாகனமாகிய மயில். அதுவும் நமக்குத் துணையாக நிற்பது. வேலும் மயிலும் ஆகிய இரண்டும் இந்தப் பிறவிக்குப் பின்பு சொர்க்கம், நரகம் என்ற பாதையை அடை யாமல் நேரே இறைவனிடத்தில் நம்மை அழைத்துச் செல்லும் தன்மை உடையவை. வடிவேல், மயூரம் ஆகிய இரண்டும் இரண்டு பெரிய தத்துவங்களின் அறிகுறிகள். வேல் ஞானசக்தி. மயூரம் ஓங்காரம். இறைவன் வடிவை ஓங்கார ஒளியில் கண்டு மெய்ஞ்ஞானம் பெற்றவர்களுக்கு மரணத்திற்குப் பின்பு மீட்டும் பிறவி வராத பெரு வாழ்வு கிடைக்கும். அதையே, பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே என்று சொன்னார். செங்கோடன் அருணகிரிநாத சுவாமிகளுக்கு மரணத்தைப் பற்றிய நினைப்பு வந்தால் உடனேயே அதற்கு மாற்றாகத் திருச்செங் கோடும் நினைவுக்கு வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இங்கேயும், செங்கோடன் மயூரமுமே என்று சொன்னார். செங்கோடன் என்ற சொல்லை, விழிக்குத் துணை செங்கோடன் திருமென்மலர்ப் பாதங்கள், மொழிக்குத் துணை செங்கோடன் முருகா எனும் நாமங்கள், பழிக்குத் துணை செங்கோடன் பன்னிரு தோளும், தனி வழிக்குத் துணை செங் கோடன் வடிவேலும், செங்கோடன் மயூரமுமே என்று கூட்டிக் கொள்ள வேண்டும். செங்கோடன் என்ற தொடர் நடுநிலை விளக்காக இருந்து முன்னும் பின்னும் உள்ள சொற்களோடும் இசைந்து பொருள் தந்தது. திருச்செங்கோட்டில் எம்பெருமான் தன் திருக்கரத்தில் வேலோடு காட்சி தருகிறான் என்பதை முன்னும் சொல்லியிருக் கிறேன். - 144