பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் இறைவன் திருவருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமல் இருக்கும் மக்களைப் பார்த்துப் பெரியவர்கள் இரங்குவது வழக்கம். அருணகிரிநாதரும் அப்படி இரங்கிப் பல பாடல்களைப் பாடி யிருக்கிறார். ஆனால் அவன் திருவருளைப் பெருகின்ற முயற்சி யில் ஈடுபடுகின்ற சிலவகை மக்களிடத்தில் அருணகிரியாருக்கு இரக்கம் தோன்றுகிறது. இந்தப் பாட்டில் அத்தகைய இரக்கத்தைப் பார்க்கிறோம். . . . இரக்கம் முருகன் திருவருளில் ஈடுபட்டு இன்பம் பெறுவதற்குரிய வாய்ப்பு மனிதனுக்கு இருக்கும்போது, சரியான வழியில் போகாமல் கோணல் வழிகளில் சென்று துன்பப்படுகிறார்களே என்று அவருக்கு இரக்கம் பிறக்கிறது. 'பணம் இல்லாமல், பணம் ஈட்டவேண்டும் என்ற நினைப்பும் இல்லாமல் வறுமை வில் உழல்கின்றானே! என்று ஒர் ஏழையைப் பார்க்கும்போது ரக்கம் தோன்றுவது முறை. ஒருவனுக்கு அளவற்ற பணம் இருக் றது; ஒரு காசுகூடச் செலவழிக்காமல் லோபியாக இருக்கிறான். அவனைப் பார்த்து, "இவனிடம் பணம் இருந்து என்ன பயன்?' என்று இரக்கம் தோன்றுவது உண்டு. இதுவும் இயல்பானது. ஒருவன் அளவற்ற பணம் வைத்திருக்கிறான். லோபியாக இல்லா மல் செலவு செய்கிறான். அத்தகையவனிடத்தில் இரக்கம் தோன்று கிறது. அப்படித் தோன்றுவதற்குக் காரணம் என்ன? அவன் பணத்தைச் சேர்த்து வைக்காமல் பிறருக்குக் கொடுக்கிறான் என்பது உண்மை. ஆனால் எந்த வழியில் செலவழிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். தீய எண்ணத்தை வளர்த்து உடலின் பத்திற்குக் காரணமான மக்களுக்குப் பணத்தைக் கொடுத்தும், கொலை, கொள்ளை, திருட்டு முதலிய துறைகளில் பலருக்குக் கொடுத்தும் செலவு செய்தால் அந்தச் செலவு நல்லது