பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அல்லாத செலவுகளைக் கண்டு நல்லவர்கள் இரங்குவார்கள். திருடன் கையில் வாளைக் கொடுப்பதும், போக்கிரி கையில் பணத்தைக் கொடுப்பதும் ஒன்றே யாகும். தக்க வழி இறைவன் உலகில் உள்ள உயிர்கள் தன் திருவருளைப் பெற்று உய்வு பெறவேண்டும் என்பதற்காகவே இந்த உடம்பை யும், இந்த உடம்பில் கருவி கரணங்களையும் நாம் வாழ்வதற் குரிய பிரபஞ்சத்தையும், இதில் பலவகையான போகங்களையும் அருளியிருக்கிறான். இவற்றை வைத்துக் கொண்டு நல்ல முறையில் வாழ்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்கிற காரியங்கள் யாவுமே இறைவன் திருவருளை அடைவ தற்குக் காரணமானவை என்று சொல்ல முடியாது. அறியாமை காரணமாக நம்பாதவர்களை நம்பி, தெளிவு இல்லாததனால் பயன் இல்லாத துறைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்கு கிறவர்களும் இருக்கிறார்கள். ஒரு பொருளைப் பெறவேண்டும் என்று விரும்புவது தவறு அன்று. ஆனால் அந்தப் பொருளைப் பெறுவதற்குரிய சரியான வழி இன்னதென்று தெரிந்து கொண்டே முயற்சி செய்ய வேண்டும். முயற்சி தோற்றதானால் வர்கள் கொண்ட விருப்பம் பயன்படாமல் ஒழியும். ஒரு மருத்துவனிடம் போகிறோம். அவன் நம் நோயை அறிந்து மருந்து கொடுக்கிறான். அந்த மருந்தைச் சாப்பிடுகிறோம். அப்போது இன்ன பத்தியம் இருக்க வேண்டும் என்பதை அவன் அறிவிக்கிறான். அவன் கொடுக்கிற மருந்தை மாத்திரம் குறிப் பிட்ட காலத்தில் சாப்பிட்டு அவன் சொன்ன பத்தியத்தை மேற் கொள்ளாமல் இருந்தால் நோய் போகாது. மருத்துவன் சொன்ன இரண்டையுமே நாம் கவனிக்க வேண்டும். அதுபோல இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்குரிய சாதனங்களை, பெருமக்கள் சொன்னபடி கடைப்பிடித்து, அவற் றுடனே வரும் இடையூறுகளைப் பாதுகாக்காமல் அவற்றுக்கு உட்பட்டால் நம் முயற்சி முழுவதும் பயன் அற்று ஒழியும். 15O