பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க்குமிழி பிரபஞ்சமே அழியும் தன்மை வாய்ந்தது. பிரபஞ்சம் முற்றும் அழியும் காலத்தைப் பிரளயம் என்று சொல்வார்கள். இந்த உடம்பு அழியும் காலத்தை மரணம் என்று சொல்கிறோம். பிறருக்கு உபதேசம் செய்கிறவர்கள் இவற்றையெல்லாம் நினைப் பூட்டி, இந்த உடம்பு நீர்க்குமிழிக்குச் சமானமானது என்று சொல் G) ffTT55 GT. நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை. 'நீர் மேல் குமிழி இக் காயம்' என்று பரதேசிப் பாட்டில்கூட வருகிறது. நீரில் தோன்றுகின்ற குமிழியைப் பார்த்தால் பளபளப்பாக இருக்கும். ஆனால் அது எந்தச் சமயத்தில் உடைந்து போகும் என்று யாராலும் சொல்ல முடியாது. இந்த உடம்பும், நெய்யும் பாலும் உண்டு, மருந்தும் விருந்தும் அருந்திப் பளபளப்பாக இருக்கிறது. பருவம் வந்துவிட்டாலோ புது மெருகு பெற்று விளங்குகிறது. அதிலும் பெண் உடம்பாக இருந்தால் பிறர் உள்ளத்தைக் கவரும் தன்மை உடையதாக இருக்கிறது. இப்படி உள்ள உடம்பு திடீரென்று ஒருநாள் அழிந்து போகிறது. இயற்கையோடு வளர்வதாக இருப்பின், நாளடைவில் அந்தப் பொலிவு போய்ச் சுருங்கித் தளர்ந்து முதுமை அடைந்து கெட்டுப் போகிறது. எல்லாருமே முதுமை வந்து இறப்பதில்லை. கட்டிளங் காளையாக இருப்பவன் திடீரென்று ஒருநாள் இறந்து போகிறான். உலக இன்பத்தை எல்லாம் அடைந்து வாழலாம் என்ற நம்பிக்கை யோடு உடம்பை வளர்த்து, அழகுக் கலைகளுக்கு ஏற்ப அலங்காரம் பண்ணிக் கொண்டு வாழும் மட மங்கை உலக இன்பத்தை நுகராமல் திடீரென்று இறந்து போகிறாள். இவற்றை யெல்லாம் பார்க்கும்போது, இந்த யாக்கை நீர்க் குமிழிக்கு நிகர் என்று சொல்வது எவ்வளவு பொருத்தம் என்று தோன்றுகிறது. பெரிய ஞானிகள் யாக்கை நீர்க் குமிழிக்கு நிகர் என்று அறிந்து, இந்த யாக்கை அழிவதற்குள்ளே என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வார்கள். உலகத்தாருக்குக் கேட் கும்படி, "இந்த யாக்கை அழியும், அழியும்' என்று சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். தான் பசித்தவன், 'நீ சோறு உண்ணு' என்று பிறன் ஒருவனைப் பார்த்துச் சொல்லமாட்டான். க.சொ.V-2 7