பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வு இல்லை கொண்டிருக்கும் வரைக்கும் நிச்சயமாகத் துன்பம் உண்டாகும். அதைப் போலவே ஆசை உடையவர்களுக்கும் மனம் தாழ்ந்து கொண்டே இருக்கும். துன்பத்தினால் வரவரக் கனம் கொண்டு அது தாழும். எத்தனை செல்வம் இருந்தாலும், கல்வி முதலியன இருந்தாலும் நெஞ்சில் குறை உடையவர்களுக்குத் துன்பம் எப்போதும் உரிமையாக இருக்கும். "ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்" என்பர் திருமூலர். குறைவிலா நிறைவு பெற்றவர்களுக்குச் சிறிதும் துன்பமும், அச்சமும் இருப்பது இல்லை. அப்பர் நிலை 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை” என்று அப்பர் சுவாமிகள் பாடினார். முதலில் அவர் நம்மைப் போலவே அஞ்சினவர்தாம். "கூற்றாயினவாறு விலக்ககிலிர்' என்று வயிற்று வலி பொறுக்கமாட்டாமல் துடித்தவர். தமக்கு ஏற்ற துணை கிடைக்காமல் வாடினவர். யார் யார் துணை என்று நினைந்திருந்தாரோ அவர்கள் எல்லாம் அவருக்குப் பயன் இல்லாமல் போய்விட்டனர். இறுதியில் ஆண்டவனே துணை என்ற நம்பிக்கை அவருக்கு உண்டாயிற்று. அவரிடத்தில் அது வரையிலும் இருந்த அச்சம் முற்றும் அடியோடு ஒழிந்தது. நாம் நல்ல துணையின்றி வாழும் மட்டும் மனத்தில் நிறைவு இல்லா மல் வாழ்கிறோம். அயலானைக் கண்டு அஞ்சி வாழ்கிறோம். எப்போதும் சந்தேகம் இருக்கிறது. நம்மைப் பற்றி நமக்கே திடமான நம்பிக்கை இல்லை. ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்யப் புகுந்தால் நம்மால் இது முடியுமா என்று சந்தேகிக் கிறோம். பிறர் நமக்குத் துணை செய்வார்களோ மாட்டார்களோ என்று அஞ்சுகிறோம். அதைவிட, இந்தக் காரியத்துக்கு யாரேனும் இடையூறு செய்வார்களோ என்ற அச்சம் மிகுதியாக உண்டா கிறது. சந்தேகத்திற்கும் அச்சத்திற்கும் நெருக்கம் அதிகம். ஐயம் உடையவன் அழிவைத் தேடிக் கொள்கிறான் என்று கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறான். 177