பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மனத்திற் சலனம் நம்முடைய ஆற்றலில் நமக்குச் சந்தேகம் இருக்கிறதோடு பிறரையும் எடைபோட்டுப் பார்த்துச் சந்தேகிக்கிறோம். எடை போடுவதற்குரிய கருவி நம்மிடம் இருக்கிறதா என்பதை யோசித்துப் பார்ப்பது இல்லை. யாரேனும் பேசினால் அதிலுள்ள நன்மை தெரிவது இல்லை; கோளாறு தெரிகிறது. பஞ்சை இரும்பாக எடை போடுகிறோம். இரும்பைப் பஞ்சாக எடை போடுகிறோம். நம் பலம் இன்னது, பலவீனம் இன்னது என்று தெரிந்து கொள்வதற்கு நம்மிடம் ஆற்றல் இல்லை. சந்தேகம் உள்ள வரை தாழ்வு அகலாது. ஒவ்வொரு கணமும் நம்முடைய மனத்தில் நாம் பலiனன் என்ற நினைவு இருந்து கொண்டிருக் கிறது. அதனால்தான் ஏதேனும் காரியத்தைச் செய்யும்போது பிறர் துணையைத் தேடுகிறோம். நாம் தேடுகிற துணைகள் நம்மைப் போலவே பலவீனமானவர்களாக இருப்பதை அறிந்து மனச் சோர்வு அடைகிறோம். உண்மையான துணை, எல்லோருக்கும் மேலான துணை இறைவன் என்ற நினைப்பும், அவனைச் சேர்ந்து ஒழுகும் வாய்ப்பும் கிடைக்குமானால் நமக்குத் தாழ்வு உண்டாகாது. அத்தகைய நிலை நமக்கு வராமையினால் ஒவ் வொரு கணமும் தாழ்வு அடைந்துகொண்டே இருக்கிறோம். பல வீனமான எண்ணங்களைக் கொண்டு, குறிப்பிட்ட காரியத்தைத் திண்மையான மனத்தோடு இருந்து செய்வதற்கு ஆற்றல் இல்லா மல் திண்டாடுகிறோம். ஒருமைப்பட்ட மனமும், ஒருமைப்பட்ட செயலும், ஒருமைப்பட்ட மொழியும் இல்லாதவர்கள் நாம். ஞானசம்பந்தப் பெருமான் தம்மைப் பற்றிச் சொல்லும்போது, "ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்' என்று பாடுகிறார். அந்த ஒருமைப்பாடு இல்லாமையினால் நாம் 1லவகை வேதனைக்கு ஆளாகித் துன்பப்படுகிறோம். மனம் ப்போதும் ஒடிக்கொண்டே இருக்கிறது. ஒடுகிற வண்டியின் மல் மண் உருண்டையை வீசினால் அது சிதறுண்டு விழும். அதுபோல் எப்போதும் ஒடிக் கொண்டே இருக்கும் மனத்தில் ஏதாவது ஒர் எண்ணத்தை வைத்தால் அது அடுத்த கணமே பலவகையாகச் சிதறுண்டு விடுகிறது. அந்தப் பண்டத்திற்கு இயல்பாக உள்ள திண்மைகூட மாறிவிடுகிறது. இறைவன் உண் 173