பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அவனைச் சிவப்பு என்று அடையாளம் சொல்கிறாம். முருக. பேரழகன். அந்தப் பேரழகனுக்கு ஒர் இலக்கணமாக அ.ெ . சிவந்த நிறம் உடையவன் என்று சொல்கிறார். - கந்தன் அடுத்தபடியாக, கந்தன் என்று சொல்கிறார். கந்தனை. சரவணப்பூம் பொய்கையில் முருகப் பெருமான் அவதார எடுத்தபோது முதலில் ஆறு திருமேனியுடன் இருந்தான். அந் ஆறு குழந்தைகளையும் பார்ப்பதற்காகச் சிவபெருமானுட வந்த பராசக்தி மிக்க அன்போடு ஆறு திருவுருவங்களையும் வா எடுத்து அணைத்தாள். அப்போது ஆறு மேனிகளும் ஒன்றா ஆறு திருமுகமும், பன்னிரண்டு திருக்கரங்களும் உடைய ஆறுமு நாதன் தன்னுடைய திருக்கோலத்தைக் காட்டினான். அப்ப இணைந்த உருவத்தில் தோற்றினவன் ஆனதால் அவனுக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்கந்த என்று சொல்வார். அதைப் பற்றி முன்பே ஒரு முறை சொல்ல யிருக்கிறேன். செங்கோட்டு வெற்பன் அருணகிரிநாத முனிவருக்குத் திருச்செங்கோடு என் திருப்பதியில் அதிக விருப்பம் உண்டு. கந்தர் அலங்காரத்தி பலவிடங்களில் திருச்சொங்கோட்டைப் பாராட்டிப் பா யிருக்கிறார். செங்கோட்டில் உள்ள வடிவேல் பெருமானிடத்தில் அருணகிரி முனிவருக்கு உள்ள ஈடுபாட்டை, "தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே" என்று வரும் பாடலிலும் வேறு பாடல்களிலும் முன்பே கவனி, திருக்கிறோம். வேறு எந்தத் தலங்களையும் சொல்லாத கந்த அநுபூதியில், - "நாகாசல வேலவ' என்று அத்தலத்தை நாகாசலம் என்று குறிப்பிடுகிறார். சாகும்மட்டும் மறவாமல் நினைப்பதற்காக முருகப் பெரு மானுக்குரிய அடையாளங்களை இங்கே சொல்ல வந்தவர், 188