பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லொணா ஆனந்தம் மணிவாசகர் தம்முடைய உடம்பெல்லாம் மரமாகி விட்டது என்று சொல்கிறார். இந்த மரத்தன்மை மாறி நெகிழ்ந்தால் இறைவனுடைய அருள் தாக்கு நமக்குக் கிடைக்கும். 'உள்ளந்தாள் நின்று உச்சிஅளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண் இணையும் மரம்ஆம் தீவினையி னேற்கே" என்று பாடுகிறார். கல்லினும் கட்டையிலும் மின்சாரத் தாக்குதல் உண்டாகுமா? நம்முடைய உடம்பு கட்டையாகவும், உள்ளம் கல்லாகவும் இருக்கும் வரைக்கும் இறைவனுடைய அருள் மின்சாரத் தாக்குப்படாது. அது மாறினால், இறைவனுடைய அருளையே நினைந்து உள்ளம் உருகி உடம்பும் உருகினால், அப்போது அநுபவம் பெறும் நிலை உண்டாகும். மனோலயம் இறைவனுடைய அருள் இன்பம் மெல்ல வந்து வந்து தாக்கும். அதனுடைய பயன் என்ன? இந்த மின்சாரத் தாக்குதல் இல்லாத வரைக்கும் மனம் தன் போக்கில் துடித்துக் கொண்டிருக்கும். இயற்கையாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒன்றின்மேல் மின்சாரத் தாக்குதல் ஏற்பட்டால் அதன் செயல்கள் எல்லாம் ஒழிந்து கீழே விழுந்துவிடும். அதுபோல இறைவன் திருவருள் மின்சாரத் தாக்கு யாருக்கு ஏற்படுகிறதோ அவன் மனம் தன் துடிப்பை இழந்து நிற்கும். அதுவரைக்கும் அவன் என்ன முயற்சி செய்தாலும் அதனை அடக்க முடியாது. அந்தத் தாக்குதல் ஏற்பட்டுவிட்டால் மனோலயம் தானே உண்டாகி விடும். அதனால், மனோலயம் தானே தரும் என்கிறார் அருணகிரியார். மனம் நம்மிடத்தில் இருக்கிறது. அதை நம்முடைய மனம் என்று சொல்கிறோம். உண்மையைச் சொல்லப் போனால் நாம் மனத்தினிடம் இருக்கிறோம். நம்மிடத்தில் அது இருப்பதனால் அது நம்முடைய சொற்படி கேட்க வேண்டும். அதுதான் இல்லை. நம்மிடத்தில் கட்டுப்பட்டு இருப்பதானால் அதை வேண்டிய 21.1