பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மனைவி, நம் பிள்ளை, நம் சுற்றத்தார் என்ற குறுகிய அளவுக்குள் உறவு கொண்டு அன்பை அந்த அளவுக்குள் செலுத்துகிறோம். 'உலகம் முழுவதும் நமக்குச் சொந்தம். உலகில் உள்ள உயிர்க்கூட்டம் அனைத்தும் நம்முடைய சகோதரர்கள். அவை அனைத்துக்கும் தலைவனாக இருப்பவன் ஆண்டவன் என்னும் உணர்வு வந்தால் எல்லாப் பொருள்களிடத்திலும், அவற்றுக்கு மேலுள்ள பெருமானிடத்திலும் அன்பு விரிந்து இருக்கும். அப் போதுதான் அன்பின் முழு மலர்ச்சி புலனாகும். அதுவரைக்கும் அன்பு சிறுகக் சிறுக மலர்ந்து வருகிறது என்று சொல்ல வேண்டும். அது முற்றும் போது ஆண்டவன் நினைவும் அவன்பால் இடை விடாத பக்தியும் உண்டாகும். அதையே அருணகிரியார் இங்கே, அவிழ்ந்த அன்பால் என்று சொன்னார். அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டையம் தாள்தொழல் வேண்டும். அன்பு தன்னுடைய முழு அளவுக்கு விரிந்து நின்றால் அந்த அன்பின் லட்சியம் இறைவன் திருவடியாக இருக்கும். மற்றப் பொருள்களிடத்தில் வைக்கும் அன்புக்குப் பற்று என்று பெயர். 'இறைவன் ஒருவன் உள்ளான். அவனால் படைக்கப்பட்ட ஆருயிர்களிடத்தில் நாம் சகோதர பாவத்தோடு பழக வேண்டும்' என்ற ஜீவகாருண்யம் உண்டானால் அது பற்று ஆகாது. பற்று வேறு; ஜீவகாருண்யம் வேறு. சிலரிடத்தில் வெறுப்பும், மற்றவர் களிடத்தில் விருப்பமும் இருந்தால் அதுவே பற்று ஆகும். அப்படியின்றி எல்லோரிடத்திலும் விருப்பம் இருந்தால் அது பற்று ஆகாது. இறைவன் திருவருள் நினைவோடு, அவன்தான் எல்லாவற்றையும் படைத்தான் என்று உணர்ந்து, எல்லா உயிர் களும் அவனுடைய குழந்தைகள் என்று அன்பு வைத்தால் அது பரவலாக இருக்கும். அவிழ்ந்த அன்பின் பயனாகத் தோற்றும் ஜீவகாருண்யம் அது. உண்மையான அன்பு யாருக்கு உண்டாகிறதோ அவன் இறை வனை நன்கு நினைப்பான். இறைவனுடைய திருவடியாகிய பற்றுக்கோட்டில் தன் நோக்கத்தை வைத்திருப்பான். 23O