பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை திரைபோடும் சமயம் அன்று நம் சமயம். இங்கேயே முத்தியின்பம் பெறலாம் என்பதை உறுதியாகச் கூறுகிறது. அந்த நிலையைப் பெற்றவர்கள் இங்கே நன்றாக வாழ் வார்கள். நன்றாகவும் சாவார்கள். அவர்கள் நலவாழ்வு வாழ்ந்து நல்ல மரணம் பெறுவார்கள். மரணம் அடைவதனால் துன்பம் அடையாமல், ஒரிடத்திலிருந்து வேறோரிடத்துக்குப் பயணம் செய்வது போல எண்ணி அதனை இயற்கையாக ஏற்றுக் கொள் 6) IITITö56IT. இத்தகைய வாழ்க்கை வாழும் வகையைக் கந்தர் அலங்காரம் எடுத்துரைக்கிறது. இதனை அருளியவர் உலகை அறிந்தவர்; உலகின் நன்மை தீமைகளையும் மனிதனது வலிமையையும் வலியின்மையையும் உணர்ந்தவர். இந்தச் சுழற்சியினின்றும் நீங்கும் வ்ழிகளை உணர்ந்தவர். இறைவனுடைய பெருமை யையும் நன்கு தெரிந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக அவ னுடைய திருவருளைப் பெற்று அதனால் இவ்வாழ்வையே பேரின்ப வாழ்வாக மாற்றிக் கொண்டவர். இறைவனுடைய கருணையில் நனைந்த அவர் உள்ளத்தில் மக்கட் சாதியிடம் கருணை சுரக்கிறது. மக்களை வாழ வைக்க வேண்டும் என்று இரக்கம் உண்டாகிறது. வேண்டாத பொருள் களைக் குவித்துக் கொண்டு, தமக்குக் கிடைத்த கருவிகளைப் பயனற்ற துறைகளில் ஈடுபடுத்தி வீணாக்கி, அச்சமும் அவலமும் கொண்டு வாழும் வாழ்க்கையை மாற்ற வழி காட்டுகிறார். இறைவன் ஒருவன் உள்ளான் என்பதையும், அவன் எந்தத் தீங்கையும் போக்கும் பேராற்றல் உடையவன் என்பதையும், நம்முடைய நிலை எத்தனை இழிந்ததானாலும் அவனுடைய கருணை வெள்ளத்துக்குப் புறம்பன்று என்பதையும், எந்தச் சமயத்திலும் எந்த நிலையிலும் அவனுடைய அருளைப் பெறும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்பதையும் கூறுகிறார். உயிர்களிடத்து அன்பு வைத்து அறநினைவோடு வாழ வேண்டும் என்றும், அத்தகைய இயல்பு உண்டாகி வளர்வதற்கு இறை வனிடம் உண்டாகும் அன்பே மூலகாரணம் என்றும் தெளிய வைக்கிறார். யமனால் வரும் துன்பத்தையும் போக்கிக் கொள்ள லாம் என்று உறுதி கூறுகிறார். இப்போது நாம் கொண்டுள்ள பார்வை மாறி உலகமே இறைவன் மயமாகவும், இல்வாழ்வே 241