பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வைத்திருக்கிறார்கள். உடலில் உள்ள உறுப்புகளுக்கு இறை வனோடு தொடர்புடைய வேலையைக் கொடுத்தார்கள். இப்படி இந்த உடம்பு முழுவதையும் ஆண்டவனின் திருத்தொண்டில் ஈடுபடுத்தினால் இது புனிதமாகும். இப்போது புலாலின் குவை யாக இருக்கிறது. இதைக் கங்கை நீரில் கழுவினாலும் தூய்மை பெறாது. இதைப் புனிதப்படுத்தும் வழி இறை வழிபாடு ஒன்றுதான். திருநாவுக்கரசர் திரு அங்கமாலை என்ற திருப்பதிகம் பாடி யிருக்கிறார். "தலையே நீ வணங்காய்' என்று தொடங்குவது அது. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு பணியைச் சொல்கிறார். உறுப்புகளைப் பெற்றதனாற் பயன் அவற்றைச் செய்வதுதான். "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை' என்று வேறோரிடத்தில் பாடுகிறார். மனத்தில் இறைவனுடைய நினைவு உறைக்க வேண்டுமா னால் அவன் நினைவு உண்டாவதற்குரிய செயல்களைப் புறத்தில் செய்து பயில வேண்டும். செயல்கள் என்பன உடம்பிலுள்ள அங்கங்களின் இயக்கம். ஒவ்வோர் அங்கத்துக்கும் ஒவ்வொரு வகை இயக்கம் இருக்கிறது. கால் நடக்கிறது; கை வேலை செய்கிறது; கண் பார்க்கிறது; வாய் பேசுகிறது. இவ்வாறு உள்ள உறுப்புகளை இறைவனுடைய வணக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும். இராமலிங்கர் வாக்கு இராமலிங்க சுவாமிகள் முருகப் பெருமானை வழிபடாத அங்கங்கள் இன்ன இன்ன விளைவைப் பெறும் என்று ஒரு பாடலில் சொல்கிறார். “எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் ஏக்கற் றிருக்கும் வெறுவாய் எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை இகழ்விறகு எடுக்கும் தலை; கந்தம்மிகு நின்மேனி காணாத கயவர்கண் கலம்நீர் சொரிந்த அழுகண்; கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி கைத்துஇழவு கேட்கும் செவி,