பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருங்கள். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று சொல்வார்கள். அது போல் நம்முடைய கைகள் ஒரு வேலையையும் செய்யாமல் இறைவனுடைய சந்நிதானத்திற்கு முன் குவிந்து நின்றால் பெரிய நன்மை உண்டாகும். கையைச் சேர்த்துக் குவிப்பது, 'நான் செயல் அற்றவன். எனக்குச் செய்வதற்குரிய உரிமை இல்லை. செயல் மாண்ட நிலை எனக்கு வர வேண்டும்' என்பதறக்கு அறிகுறியாகும். நின் தண்டைஅம்தாள் தொழாத கையும் என்று குறை கூறினவர் அடுத்தபடி நாவைப் பற்றிச் சொல்கிறார். பாடாத நா "எம்பெருமானே பலவற்றைப் பேசுகின்ற நாக்கு எனக்கு இருந்தும் என்ன பயன்? உன்னைப் புகழ்வதற்குத்தானே நாவை யும் மொழியையும் எனக்குத் தந்திருக்கிறாய்? உன்னைப் பரவிப் பாடி அந்தச் சுவையை நுகரவேண்டும். என்னுடைய நாவோ உன்னைப் பாடுவது இல்லை. எனக்கென்று ஆராய்ந்து இந்த நாக்கைத்தான் கொடுக்கவேண்டுமென்று பிரமன் படைத்திருக் கிறான்' என்கிறார். அருணகிரியார் பாடாமலேயே இருந்தவர் என்றால் நாம் நம்ப முடியுமா? 'பாடாத நாவை எனக்குப் படைத்தான்' என்று சொல்வதே ஒரு பாட்டாக இருக்கிறதே! நின் தண்டைஅம்தாள் பாடாத நாவும் பாடுதல் இறைவனுடைய புகழைச் சொல்வது. நாமாகப் புதிய பாடல்கள் பாடவேண்டுமென்பதில்லை. முன்னே பல பெரியவர்கள் பாடி வைத்த பாடல்களை இறைவன் முன் நின்று பாடவேண்டும்; அல்லது அவனை நினைந்து பாடவேண்டும்; அதனால் உள்ளம் நெகிழும். அருணகிரியார் பிறர் பாடல்களைப் பாட வேண்டிய அவசிய மின்றித் தாமே ஆயிரக்கணக்கில் முருகப் பெருமானைப் பாடி யவர். ஆகவே அவர் நாக்குப் பாடாத நாக்கு அன்று. நம்முடைய 28C)