பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்த குற்றம் என்ன? நாவைச் சொல்வதற்காகத்தான் தமக்கே உரிய முறையில் அவ்வாறு சொல்கிறார். சிறப்பான உறுப்புக்கள் தலை, கண், கை, நாக்கு ஆகிய நான்கையும் இங்கே சொன் னாலும் உப லட்சனத்தால் மற்ற உறுப்புக்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உ.ம்பில் உள்ள உறுப்புகளில் மிகவும் சிறந்ததாக இருப்பது தலை என்று சொல்வார்கள். தலை என்பதே சிறப்புடைய பொருளைக் குறிக்கும் சொல். வட மொழியில் இதை உத்தமாங்கம் என்று சொல்வார்கள். உடம்பினால் வழி படும் மனிதனுக்கு எல்லாவற்றிலும் சிறந்த உறுப்பாகிய தலை முருகப் பெருமானுடைய தாளில் கிடந்து வணங்க வேண்டும். ஆகையால் அதை முதலில் சொன்னார். ஐம்பொறிகளில் மிகவும் சிறந்தது கண். 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை' என்று சொன்னார்கள். 'சர்வேந்த்ரியானாம் நயனம் பிரதானம்' ‘. என்பது வடமொழி வாக்கியம். கண் என்னும் பொறி நம் உள்ளத் தில் ஆசையை உண்டாக்குவதற்கு உறுதுணையாக இருக்கிறது. பார்க்கின்ற பொருள்களெல்லாம் நமக்கு வேண்டுமென்று ஆசைப் படும்படி கண் வேலை செய்கிறது. அதை மாற்ற வேண்டுமானால் எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்க்க வேண்டும். பார்க்கும் பொருளின் திறத்தைத் தெரிந்து பார்க்கும் ஆற்றல் நம் கண்ணுக்கு இருக்கிறது. மனிதனுடைய உடம்பு சிறந்தது. அதனில் அவனுடைய தலை மிகச் சிறந்தது. அதில் அவனுடைய கண் மிகமிகச் சிறந்தது. அடுத்தபடியாக மனிதன் கரங்களால் பல வேலைகளைச் செய்கிறான். விலங்குகளுக்குக் கால்கள் உண்டேயொழியக் கைகள் இல்லை. உலகம் முழுவதும் மனிதன் செய்கிற செயல் கள் மிக்க அற்புதமாக இருக்கின்றன. அவனுடைய கைகள் அவனுக்கு உறுதுணையாக உள்ளன. ஆகையால் மனிதனுடைய கைகள் மிகச் சிறந்தவை. 281