பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தான் நிரந்தரமானது என்றும் சொல்லியிருக்கிறார்கள்; வெவ் வேறு மொழிகளில் வெவ்வேறு வகையில் வெவ்வேறு துறை யில் சொல்லியிருக்கிறார்கள். அத்தனை பேர்களும் நம்பக் கூடாத வர்களா? அவர்கள் சொல்வதை நம்பக் கூடாது என்று சொல்வது முறையாகுமா? கூர்கொண்ட வேலன் அருணகிரிநாதர் உலக இயலில் ஈடுபட்டுத் தாம் ஈட்டிய பொருளில் மிக்க பற்றுக் கொண்டு வாழ்பவர்களைப் பார்த்து உபதேசம் செய்யப் புகுகிறார். கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவிர்காள்! மக்கள் பொருளைப் போற்றுகிறார்கள்; மனைவியையும் மக்களையும் போற்றுகிறார்கள். நான் நான் என்று தம்மையே போற்றி ஏற்றம் கொண்டாடுகிறார்கள். தம்முடைய அழகான மனைவியைப் பார்க்குந்தோறும், 'நமக்கு இப்படிக் கிடைத்தாளே என்று தம்மைத் தாமே கொண்டாடிக் கொள்கிறார்கள். தம்முடைய மாளிகையின் அழகைப் பார்த்தும், பிறருக்குக் காட்டியும் பெரு மிதம் அடைகிறார்கள். இப்படி எதை எதையோ போற்றி ஏற்றம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் ஒருநாளாவது ஆண்டவனைப் போற்றி இருக்கிறார்களா? ஆண்டவன் வடிவேல் பெருமான். அவன் கையில் இருக்கிற வேல் கூர்மையானது. அதனை ஞானசக்தி என்று சொல்வார்கள். ஞானம் உயர்ந்த அறிவு. அறிவுக்கும் கூர்மை உண்டு; வேலுககும் கூர்மை உண்டு. வேல் ஞான சக்தி. ஆகையால் அது மிகக் கூர்மையாக இருக்கிறது. இறைவன் அதனைத் தன் படையாக வைத்திருக்கிறான். ஞான சொரூபியாகிய ஆண்டவன், ஞான சக்தியைத் தன் படையாகக் கொண்ட ஆண்டவன், தன்னையும் தன் கை வேலையும் போற்றுகிறவர்களுக்கு அருள் செய்கிறான். ஞானிகள் கூர்கொண்ட வேலனைப் போற்றி ஏற்றம் கொண்டாடு கிறார்கள். மற்றவர்களோ தம் மனையாட்டியிடத்தில் மயக்கம் கொண்டு, தாம் ஈட்டிய பொருளிடத்தில் மயக்கம் கொண்டு அவையே உண்மையென்று கருதி அவற்றைப் பெற்றதனாலே 3O6