பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மாகத்தை முட்டி வரும்நெடுங் கூற்றன்வந் தால்என்முன்னே தோகைப் புரவியில் தோன்றிநிற் பாய்,சுத்த நித்தமுத்தித் த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனை த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே (வானத்தை முட்டி வருகிற உயர்ந்த தோற்றத்தையுடைய யமன் என் உயிரைக் கொள்ள வந்தால் அப்போது என்முன்னே நீ உன்னுடைய தோகையையுடைய வாகனமாகிய மயிலின் மேல் வந்து காட்சி அளித்து எனக்குத் துணையாக நிற்கவேண்டும்; நித்தியமான பரமுத்தியை அடியார் களுக்கு வழங்கும் மலைபோன்ற அசஞ்சனுைம், முப்புரங்களை அழித்த வனும், மூன்று கண்களையுடையவனுமாகிய சிவபெருமானைத் தனது வலப் பாகத்தில் வைத்திருக்கும் மேலான மங்கல சொரூபியாகிய அம்பிகையின் குழந்தையே! மாகம் - வானம். புரவி - குதிரை: இங்கே ஊர்தியென்ற பொதுப் பொருளுக்காயிற்று. தோகைப் புரவி என்றதனால் மயிலாயிற்று; தோகையை யுடைய வாகனம் என்றும் தோகையாகிய வாகனம் என்றும் இருவகையில் பொருள் கொள்ளலாம். இரண்டாவது பொருளில், தோகை, ஆகுபெயர். 'ஆடும்பரி' என்று குதிரைக்குரிய பெயரை மயிலுக்கும் வழங்குவது அருணகிரிநாதர் வழக்கம். தோன்றிப் பின்பு துணையாக நிற்பாய், சுத்த முத்தி, நித்தமுத்தி என்று கூட்ட வேண்டும். முத்தி த்யாகம் என்று சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். பொருப்பு: உவம ஆகுபெயர். த்ரியம்பகனை - முக்கண்ணனை, அம்பகம் - கண். பாகம் - இங்கே வலப்பாகம்.) இது கந்தர் அலங்காரத்தில் 80-ஆவது பாட்டு. 338