பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி இந்திரியங்களின் இன்பத்தை ஆராய்ந்தாலும் யார் மிகச் சிறந்த இன்பத்தை நுகர்கிறார்களோ அவர்களையே வளவாழ்வு உடையவர் என்று போற்றுகிறோம். மனிதன் மிகச் சிறந்த நுகர்ச்சியை நுகரலாம்; மிகச் சிறந்து ஆராய்ச்சியைச் செய்யலாம்; தன்னுடைய வாழ்வை மிகச் சீரியதாக வைத்துக் கொள்ளலாம். பணத்தையும் பலத்தையும் அறிவையும் தேடிக் கொள்ளும் மக்கள் எல்லோருமே அவற்றால் சிறந்த உயர்ந்து நிற்கவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அமெரிக்க நாட்டில் பணத்தை மலை போலக் குவித்து வைத்திருக்கிறார்கள். ரஷ்ய நாட்டில் ஜன சக்தியை மிக அதிகமாகக் குவித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் அங்கே அமைதியைக் காணவில்லை. பாரத நாட்டில் இறைவனுடைய பக்தியை வளர்த்து அதனால் இறைவன் திருவருளைப் பெறுவதுதான் மனிதப் பிறவியினால் பெறும் உயர்ந்த பயன் என்று தெரிந்து கொண்டு அந்த வழியில் ஒழுகு கிறார்கள். . 3. . தாலாட்டு இளம் பருவத்திலிருந்து இந்த நாட்டுக் குழந்தைகளுக்கு எது நிச்சயமானது என்ற அறிவை அடிக்கடி புகட்டி வருகிறார்கள். குழந்தையைத் தாலாட்டும் தாய் தாலாட்டுப் பாட்டிலே வேடிக்கைப் பாட்டைச் சொல்வது இல்லை. ஆண்டவனது திரு அவதாரங்களையும் திருநாமங்களையும் சொல்லித் தாலாட்டு கிறாள். உயர்ந்த வேதாந்த தத்துவங்களைச் சொல்லும் பாடல் களைப் பாடுகிறாள். அவற்றையெல்லாம் அறிந்து உணர்ந்து கொள்கிற அறிவு குழந்தைக்கு இருப்பது இல்லை. ஆனால் காதில் அந்த ஒலியைக் கேட்டு, மெல்ல மெல்லப் பிராயம் வளர்ந்தால், கேட்ட சொற்களுக்குப் பொருள் என்ன என்ற ஆராய்ச்சி பிறக்கும். குழந்தையைத் தாலாட்டும்போது பாடும் பாட்டை அது அறியாவிட்டாலும் முன்பே குழந்தையாக இருந்து பின்பு வளர்ந்த பெரிய மனிதர்கள் கேட்பார்கள் அல்லவா? எப்படியோ அந்தப் பாட்டு ஒருவகையான உயர்ந்த சூழ்நிலையை உண்டாக்கிவிடுகிறது. 4]