பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது இறைவனுடைய நினைவு உண்டாவதற்காக ஆண்டவன் திருநாமங்களை வைக்கி றோம். இவையெல்லாம் மனிதப் பிறவியின் ஆரம்பத்திலேயே இறைவனுடைய உணர்வு நமக்கு இருக்கவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள். - இதுவரைக்கும் சொன்னவற்றை எல்லாம் சற்றே தொகுத்துப் பார்க்கலாம். உலகத்தில் உள்ள எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களில் மனிதப் பிறவி சிறந்தது. அந்தப் பிறவியில் அறிவும் ஆற்றலும் செல்வமும் படைக்கும் வாய்ப்பு மிகுதியாக இருக் கிறது. ஏனைய விலங்குகளுக்கு இவை இல்லை. அந்த அறிவைக் கொண்டு இறைவனுடைய திருவருளைப் பெற வேண்டுமென்ற ஆசையும், அதற்கு ஏற்ற முயற்சியும் நமக்கு உண்டாக வேண் டும். சிறப்பான நிலையில் சில விலங்கினங்கள்கூட இறை வனை வழிபட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் நினைப் பூட்டுகிற பாரத தேசத்தில் பிறவி எடுப்பது மிக அருமையான காரியம். அத்தகைய பிறவி நமக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்த வற்றால் மிகச் சிறந்த பயன் உண்டாகும்படி நடக்க வேண்டும். அந்தப் பயன்தான் இறைவன் திருவடியை வழிபடுதல். "அப்படிப் பெற்றும் உன் திருவடியை நான் வணங்க வில்லையே! என்று. அருணகிரியார் இந்தப் பாட்டில் இரங்குகிறார். பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் நின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன்! அறிவின் வகை r பொதுவாக மனிதப் பிறவியின் சிறப்பைப் பற்றிப் பேசு கிறபோது, அறிவு இருப்பதனால் அது சிறந்தது என்று பலரும் சொல்வது உண்டு. நூல்களைப் படிக்கும் அறிவு என்பது மாத்திரம் பொருள் அன்று. அறிவு பலதரப்படும். ஒன்றும் அறியாத குழந்தையைவிடப் படிக்கத் தெரிந்த குழந்தை அறிவுடையது. படிக்கத் தெரிந்த குழந்தையைக் காட்டிலும் நூல்களில் ஆராய்ச்சி உடைய குழந்தை பின்னும் அறிவுடையது. அறிவு பசு அறிவு, பாச அறிவு, பதி அறிவு என்று மூன்று வகைப்படும். இறைவனைப் 42