பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி பற்றிய அறிவைப் பதி அறிவு என்ற சொல்வார்கள். அந்த அறிவை வளர்க்கும் நூல்களைப் படிப்பது சிறந்த பயனைத் தரும். இப்படி நூல்களால் வரும் அறிவுகூட உயர்ந்த அறிவு ஆகாது. அது அநுபவத்தோடு கலவாத அறிவு; அபர ஞானம் என்று பெயர் பெறும். இந்த வாழ்வில் நன்றாக வாழ்வதற்கும், இனிக் கிடைக்கவேண்டிய நன்மைக்கு என்ன செய்ய வேண்டுமென்று வழி காட்டுவதற்கும் நூலறிவு பயன்படும். அந்த அறிவை மனிதன் பெறத்தான் வேண்டும். பின்னாலே அடையவேண்டிய அநுபவத்தில் ஒருவிதமான ஆர்வத்தை உண்டாக்க நூல் அறிவு பயன்படும். சிறந்த குருவின் திருவருளால் உபதேசம் பெற்று அநுபவம் பெறவேண்டும். அநுபவம் நமக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கையையும், நாமும் முயற்சி செய்து பெறவேண்டுமென்ற ஆர்வத்தையும் உண்டாக்குவதற்கு நூல்களும், நல்லோர் கூட்டுறவும், பெரியவர்களின் உபதேசங்களும் பயன்படும். அந்த ஆர்வத்தைச் செயலாக்கி முயன்று அநுபவ முறையில் பெற யார் துணிகிறானோ அவன் தான் பிறகு சிறந்த அறிவைப் பெறுகிறான். அந்த அறிவும் அநுபவமும் ஒன்றாகவே தோன்றும். அதைப் பரஞானம் என்று சொல்வார்கள். அத்தகைய அநுபவத்தைப் பெறுவதற்கும் இந்தப் பிறவியே சிறந்தது. தேவரும் மனிதரும் விலங்குகளுக்கு உறுப்புகள் வளம் பெறுவது இல்லை. அறிவும் வளம் பெறுவது இல்லை. அவற்றுக்குச் சுதந்தரம் கிடை யாது. ஆகையால் அவை இழிந்த பிறவி என்று நினைக்கிறோம். சுதந்தரமும், உறுப்புகளின் வளமும், நினைவு ஆற்றலும் மிகுதி யாகப் பெற்ற மனிதன் சிறந்தவனாகிறான். விலங்கினங்களை விட மனிதன் சிறந்தவன் என்பது கிடக்கட்டும். தேவர்களைக் காட்டிலுங்கூட மனிதன் சிறந்தவன் என்று சொல்ல வேண்டும். தேவர்கள் இறைவனிடம் வேலை வாங்குவார்களேயன்றி அவன் பெருமையை நன்கு உணரமாட்டார்கள். தங்களுடைய வாழ்வுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அப்போதுதான் அவர்களுக்கு இறை வனைப் பற்றிய நினைவு வரும். விலங்கினங்கள் முழுப் பாவத்தின் பயனாகப் பிறவி எடுக்கின்றன. அதுபோலவே முழுப் புண்ணியத்தின் பயனாகத் தேவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்கு 43