பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி கள் அதிகம். இந்த நிலத்தில் உடம்பு பட்டவுடன் அதனிடம் நான் எங்கே இருக்கிறேன் என்ற கேள்வி பிறக்கிறது. வடமொழி யில் சிலேடையாகச் சொல்வார்கள். குழந்தை வயிற்றில் இருக்கும் மட்டும் இறைவன் துணையோடு இருந்தது. அது நிலத் தில் வந்து விழுந்ததும் தான் வந்த இடம் இன்னது என்று தெரியா மல், 'எங்கே, எங்கே?' என்று கேட்கிறது என்று சொல்வார்கள். குழந்தை குவா குவா என்று அழுகிறது அல்லவா? குவா என்பதற்கு வடமொழியில் எங்கே என்று பொருள். இது சமத்காரமாக இருந்தாலும் இதில் ஒர் உண்மை இருக்கிறது. பேசத் தெரிந்தவுடன் அம்மாவிடமும், அப்பாவிடமும், "அது என்ன? இது என்ன?' என்று குழந்தை நச்சரித்துக் கேட்கிறது. அம்மா என்று பேசக் கற்றுக் கொள்கிறது. அப்பா என்று கூப்பிடக் கற்றுக் கொள்கிறது. சாப்பிடக் கற்றுக் கொள்கிறது. நாளடைவில் உண்ணவும், உடுக்கவும், உடம்பைச் சுத்தம் பண்ணிக் கொள்ளவும் கற்றுக் கொண்டுவிடுகிறது. முதலில் அம்மா கற்றுக் கொடுக்கிறாள். பின்பு அந்தக் குழந்தையே மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறது. இப்படி ஒரு பருவம் வரைக்கும் தினந்தோறும் பார்ப்பதை எல்லாம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறது. அந்தப் பருவம் நீங்கின பிறகோ பிறர் வாழ்வதைப் பார்த்து ஆசையை வளர்த்து, அதனை அநுபவிக்க என்ன வழி என்று கற்றுக் கொள்ள முயல் கிறான் மனிதன். பால் குடிக்கக் கற்றுக் கொண்ட குழந்தை தாயி னுடைய உதவியால் அதைச் செய்கிறது. சோறு தின்னக் கற்றுக் கொள்கிற குழந்தை தாயினுடைய உதவி இல்லாமலே வேறு சிலருடைய உதவியினால் தின்னக் கற்றுக் கொள்கிறது. பணம் சம்பாதிக்கக் கற்றுக் கொள்ளும் மனிதன் தன்னுடைய முயற் சியைக் கொண்டு அதைச் செய்கிறான். இப்படிப் பிறந்தது முதற் கொண்டு சாகும் மட்டும் வஞ்சகங்களையும், பொய்யையும், பணம் சம்பாதிக்கும் வழியையும், பிற மனிதர்களை மயக்கும் திறத்தையும் மனிதன் கற்றுக் கொண்டே இருக்கிறான். அவன் கற்காமல் சும்மா இருப்பது இல்லை. ஆனால் ஒன்றை மாத்திரம் கற்றுக் கொள்வதில்லை. இறைவன் திருவடியை அடைவதற் குரிய நெறி இன்னது என்பதைக் கற்றுக் கொள்வதில்லை. க.சொ.V-5 55