பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வதற்கு நீ இருந்தும், நல்ல முறையில் செயல் செய்வதற்குரிய நான் பிறவியைப் பெற்றும், நான் உன்னை அடைந்து பணிந்து உன் திருவடி இன்பத்தைப் பெற்று வாழவில்லையே! என்கிறார். பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்நின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன்,மத கும்பகம்பத் தறுகட் சிறுகட்சங் க்ராம சயில சரசவல்லி இறுகத் தழுவும் கடகா சலபன் னிருபுயனே! (பெறுவதற்கு அருமையான மனிதப் பிறவியைப் பெற்றும் நின்னுடைய சிறிய அடியை அணுகி வழிபட்டு அதைப் பெற யான் கற்றுக் கொள்ளவில்லையே; மதம் பொழியும் மத்தகத்தையும், அசைவை யும், அஞ்சாமையையும், சிறிய கண்ணையும், போரிடும் இயல்பையும் உடைய மலை போன்ற ஐராவதத்தால் பெறப் பெற்ற இனிமையை யுடைய கொடி போன்ற தேவயானையானவள் இறுகி அணைக்கும் கடகம் அணிந்த மலைகளைப் போன்ற பன்னிரண்டு தோள்களையுடைய பெருமானே. - குறுகி - அணுகி, அடியைப் பெறுதலாவது - முத்தியின்பத்தை அடைதல். கும்பம் - மத்தகம். கம்பம் - அசைவு. தறுகண் - அஞ்சாமை, சங்க்ராமம் - போர்; சயிலம் - மலை; சங்க்ராம சயிலம் - யானை. சரச வல்லி - இன்பக் கொடி. கடகம் - தோள்வளை. அசலம் - மலை.) இது கந்தர் அலங்காரத்தில் 67-ஆம் பாட்டு. 86