பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 கரையேறினான். அவன் அணிந்திருந்த ஆடைகள் எல்லாம் நனைந்து போயின. கையில் கொண்டுபோன பொருள்கள் எல்லாம் ஆற்றோடு போயின. ஏதோ கொஞ்சம் நீச்சல் கற்றுக் கொண்டிருந்ததால் ஒருவாறு பிழைத்துக் கரையேறினான். அவன் மற்றொரு நாள் அந்த ஆற்றில் ஒரு படகில் மேல் ஏறி வந்தான். ஏறி வரும்போது எந்த எந்த இடத்தில் ஆழத்தின் அளவை எடுத்தானோ அந்த அந்த இடங்கள் வந்தபோதெல்லாம், 'இங்கே ஒர் ஆள் ஆழம்; இங்கே இரண்டாள் ஆழம்' என்று கணக்குச் சொல்லிக் கொண்டு வந்தான். அவனோடு ஏறிவந்த மற்றொரு நண்பனுக்கு அவன் சொல்வது ஒன்றும் புரியவில்லை. தண்ணீரின் மேலே ஒடத்தில் இருந்ததால் தண்ணீரின் கீழ் ஆழம் எத்தனை என்பது அவனுக்குத் தெரியவில்லை. அந்தத் தண்ணிர் குளிர்ந்ததா, சுடுவதா என்பதையும் அவன் உணரவில்லை. இறை வனுடைய திருவருள் என்னும் தோணியில் ஏறிக் கொண்டால் இப்படித்தான் பிரபஞ்சத்தோடு தொடர்புடைய எல்லைகள் நமக்குத் தெரிவதில்லை. இன்பம் துன்பம் ஆகிய உணர்ச்சிகூடப் பிரபஞ்சத்தை ஒட்டி வாழ்கிறவர்களுக்கு உண்டேயன்றி, இறை வனோடு ஒட்டி வாழ்கிறவர்களுக்கு இருப்பது இல்லை. காலத்தின் உணர்வு நம்முடைய உள்ளம் எதனோடு ஒட்டியிருக்கிறதோ அதற்கு ஏற்பக் காலமும் இடமும் இன்பமும் துன்பமும் உடையன வாகத் தோன்றும். மந்த மதி உள்ளவனுக்குப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் மட்டும் துன்பம் நீடித்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு மணிபோல இருக்கும். ஆனால் அவன் வீட்டுக்குப் போய் விட்டால் காலம் ஒடுவது தெரியாது. விளையாட்டில் புகுந்தானானால் பொழுதே போதவில்லை யென்று தோன்றும். தன்னுடைய சொந்த வீட்டில் இருப்பதைக் காட்டிலும் மாமனார் வீட்டில் இருக்கும்போது மாப்பிள்ளைக்குக் காலம் போவது தெரிவதே இல்லை. அப்படியே தம்முடைய பிறந்தகத்தில் இருக்கும்போது பெண்களுக்கு காலம் போவது தெரிகிறது இல்லை. இடத்தினுடைய வேறுபாட்டாலே, மனோ பாவத்தின் மாற்றத்தினாலே இந்த வேறுபாடு அமைகிறது. காலத்தின் அளவு எல்லோருக்கும் ஒன்றாக இருந்தாலும் அவ 88