பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லை கடந்த இன்பம் ரவர்கள் அநுபவிக்கின்ற இன்ப துன்பத்தின் சார்பினால் காலத்தை உணர்வதும், உணராமையும் உண்டாகின்றன. சோம்பேறிகளுக்குக் காலம் போவதே சிரமமாக இருக்கிறது. 'இன்னும் போது போகவில்லையே' என்று சொல்கிறார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறவர்களுக்குக் காலம் போவது தெரிவதில்லை. 'பொழுது போதவில்லையே' என்று அவர்கள் சொல்கிறார்கள். தம்முடைய நாயகரோடு ஒன்றுபட்டு இன்ப வாழ்வு வாழ்கிற காதலிமார்களுக்குக் காலம் போவது புலனாவ தில்லை. ஆனால் காதலரைப் பிரிந்து வாழும் காதலிமார் களுக்கோ ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகத் தோன்று கிறது. இந்த இரண்டு வகைப் பெண்களுக்கும் காலத்தின் நீட்டம், குறுக்கம் எவ்வாறு தோற்றினாலும் உண்மையில் இரண்டிடத்தும் காலம் ஒரே அளவுள்ளதாகவே இருக்கிறது. தன் தலைவனோடு ஒன்றாத மங்கைக்குக் காலத்தின் எல்லை நீண்டு தோன்றும். ஒன்றியவளுக்கோ காலமே தோன்றுவது இல்லை. அதுபோலவே இறைவனாகிய தலைவனுடன் ஒன்றிய உள்ளம் படைத்த ஆன்மாக்களுக்குக் காலம் போவது தெரியாது. எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே இராது. இட உணர்வு தன்னுடைய சொந்த வீட்டில் வேண்டிய வசதிகளைப் பெற்று நாயகனுடன் வாழ்கின்ற மங்கை இன்பத்தை நுகர்கிறாள். பல காலமாகத் தன்னுடைய தலைவனைப் பிரிந்து அவன் இருக்கும் இடம்கூடத் தெரியாமல் அவனை நாடித் தேடி ஊரெல்லாம் அலைகிறாள் ஒருத்தி. கடைசியில் எங்கோ ஒரு பாலைவனத்தில் ஒரு மரத்தின் அடியில் அவனைக் காண்கிறாள். அவனைக் காணாதபோது எத்தனையோ மாளிகையில் அவள் தங்கியிருக்கிறாள். பூம்பொழில்களைத் தாண்டி வந்திருக்கிறாள். இனிய நீர்ச்சுனையில் நீர் குடித்து வந்திருக்கிறாள். ஆனால் இந்தப் பாலைவனத்தில் ஒற்றை மரத்தின் அடியில் தன் காதலனைக் கண்டபோது அவளுக்கு உண்டான இன்பம் மாளி கையில் தங்கியபோதெல்லாம் உண்டாகவில்லை. இனிய நீர்ச் சுனையில் நீர் பருகிய காலத்தும் உண்டாகவில்லை. மற்றவர் களுக்கு அந்த இடங்கள் எல்லாம் இன்பம் தருவனவாக இருந் 89