பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமராசன் கடைஏடு தாலும் அவனுடைய சீட்டுச் செல்லாது. யமராசனுடைய சீட்டு அவனுடைய ஆணைக்கு அடங்கி வாழ்கின்ற பிரபஞ்ச சம்பந்தம் உடையவர்களிடத்தில்தான் செல்லும். மற்றவர்களுக்கு எல்லாம் அரசனாக இருக்கலாம். ஆனால் முருகப் பெருமானை நம்பின வர்களுக்கு அமராவதியிற் பெருமாளாகிய அவனே மகாராசன். ஆகையால் இந்தக் கடையேடு அவர்களை ஒன்றும் செய்யாது. இதனை அழுத்தமாக இந்தப் பாட்டில் சொல்கிறார். குமரா சரணம் சரணம்என்று அண்டர் குழாம்துதிக்கும் அமரா வதியில் பெருமாள் திருமுகம் ஆறும்கண்ட தமராகி வைகும் தனியான ஞான தபோதனர்க்குஇங்கு எமராசன் விட்ட கடையேடு வந்துஇனி என்செயுமே. (குமரா சரணம் சரணம் என்று கூறித் தேவர்களின் கூட்டம் துதிபுரியும் அமராவதியில் எழுந்தருளிய பெருமானுடைய திருமுகம் ஆறையும் உள்ளத்தே தரிசித்த அடியார்களாகிய, கவலையற்று உலகில் வாழும் தனிச்சிறப்பையுடைய ஞானத்தோடு அமைந்த தவமாகிய செல்வத்தைப் படைத்தவர்களுக்கு, இவ்வுலகத்தில் யமராசன் அனுப்பிய இறுதிக்காலச் சீட்டு வந்து அவர்களுக்கு என்ன துன்பத்தைச் செய்யும்? அண்டர் - தேவர். குழாம் - கூட்டம். தமர் - உறவினர்; இங்கே முருகன் அடியார். தனியான ஞானம் - ஒப்பற்ற பேரறிவு. தனியான தபோதனர் என்றும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். இங்கு - இவ்வுலகத்தில். எமனுக்குப் பல தூதுவர்கள் உண்டு; அவர்களுக்குத் தலைவனாதலின் அவன் எமராசன் ஆனான். கடை ஏடு - வாழ்வின் இறுதியில் உயிர் கொண்டு போவதற்கு யமதூதரிடத்தில் கொடுத்தனுப்பும் ஆணையோலை.) முருகனை வழிபடுபவர் எவரானாலும் யமபயம் அவருக்கு இல்லை என்பது கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் 87ஆவது பாட்டு. 1O9