பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை அவருக்குப் பெரிய செல்வர்களும் நண்பர்கள்: ஏழைகளும் நண்பர்கள். நன்றாகப் படித்த பேரறிஞர்களும் அவரை மதிப்பார் கள், கல்வி யறிவில்லாத பாமரரும் அவர்பால் அன்பு பாராட்டு வார்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஞானியருக்கும் பெரிய வர்களுக்கும் அவரைத் தெரியும். அவருடன் பலகாலமாகப் பழகும் பேறு எளியேனுக்குக் கிடைத்திருக்கிறது. அவரைப் பணிந்து மணிக்கணக்காக அவருடன் அளவளாவியிருக்கிறேன். பழைய பாடல்களானாலும் புதிய பாடல்களானாலும் நல்லனவா இருந்தால் அவற்றில் சொக்கிப் போவார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் அவருக்காக இரண்டு கீர்த்தனங்கள் பாடியிருக்கிறார். பழைய பாடல்களாகிய தேவார திருவாசகங்களையும் திவ்யப் பிரபந்தத்தையும் கேட்டு இன்புறும் அவர் அருணகிரிநாதர் திருவாக்கில் மிகுதியாக ஈடுபடுவார். அருணகிரியார் பெரிய அநுபூதிமான் என்பதை அடிக்கடி சொல்லிக் காட்டுவார். அநுபவ உலகில் சஞ்சரிப்பவர்களுக்குத்தான் இந்த உண்மை தெரியவரும். இலக்கியக் கண்கொண்டும் சமய நூலறிவுக் கண்கொண்டும் அவர் திருவாக்கைப் பார்ப்பவர்கள் பலர் உண்டு. அந்தத் துறை களில் அருணகிரிநாதரைவிடச் சிறப்பாகப் பாடிய பெரியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இறையருளநுபவம் பெற்று அதன் பயனாக உண்டான உள்ளக் களிப்பில் மிதந்து பாடியவர்கள் மிகச் சிலரே. அருணகிரிநாதர் அவ்வாறு பாடியவர். அவருடைய அலங்காரப் பாடல்களையும் அநுபூதிப் பாடல் களையும் கேட்டால் சில சமயங்களில் மேலே சொன்ன ஞானச் செல்வர் தம்மை மறந்து பல மணி நேரம் இருந்துவிடுவார். மின்சாரத் தாக்குதலைப் போல அந்தப் பாடல்கள் அவருடைய இதயத்தின் ஆழத்தைப் போய்த் தொட்டுவிடும். கந்தர் அலங்கார விரிவுரை நூல்களை ஆழ்ந்து படித்து வாழ்த்தும் அன்பர்கள் பலர் முருகன் திருவருளால் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். வடகுமரை பூரீ அப்பண்ண சுவாமிகளவர் களும் அவற்றைக் கடைக்கணித்து அவ்வப்போது ஆசி கூறிப் பாராட்டியருளுகிறார். அநுபூதிமான் அருணகிரிநாதர் என்பதைப் பல வகையில் சுட்டிக்காட்டும் பகுதிகளை யெல்லாம் அவர் மிக்க 123