பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை சூழொளி விளக்கே” என்று மாணிக்கவாசகர் பாடுவார். "சோதியுட் சோதியுட் சோதி” என்பார் இராமலிங்க சுவாமிகள். பாட்டைப் படிப்பதும் கேட்பதுங்கூட ஒருவகையான சாதனம் என்பதைப் பலர் கூறியிருக்கிறார்கள். வடகுமரை அண்ணலிடம் அதைக் கண்கூடாகக் காணலாம். அருணகிரிநாதர் பாடலில் அநுபவத் தேக்கமுள்ள இடம் வந்துவிட்டால் அவர் கண்ணில் ஒளியும் புனலும் வெளிப்படும்; உடம்பு புளகம் போர்க்கும். தம்மை மறந்து சில நேரம் இருந்து விடுவார். அத்தகைய இன்ப மயக்கத்தில் ஆழ்த்தும் மருந்தாக அருணகிரியார் வாக்கு விளங்குகிறது. கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகளில் வரும் பல பகுதி களைக் கண்டு மிகவும் பாராட்டி இன்புறுவார் சுவாமிகள். அநுபூதி மான்கள் பாராட்டினால் அதற்குத் தனிச் சிறப்பு உண்டல்லவா? அதனால் மேலும் மேலும் ஊக்கம் உண்டாகிறது. Sk இந்தப் புத்தகம் கந்தர் அலங்கார வரிசையில் பதினேழாவது நூலாக மலருகிறது. இதில் ஆறு பாடல்களுக்குரிய விளக்கங்கள் § 6; Försööf. - முதல் பாட்டில், முருகன் திருவருளைப் பெற்றவர்களுக்குப் பிறவிப் பிணி இல்லையென்பதை அழகான முறையில் சொல் கிறார் அருணகிரியார். அடியாருக்குப் பிறவியைக் கொடுக்க எண்ணி அவர் பெயரைப் பிறப்போர் பட்டியலில் பிரமன் எழுதினால், அவனுக்கு முருகன் இரு விலங்கைப் போடுவான் என்று சமற்காரமாகச் சொல்கிறார். அந்தப் பாட்டின் விளக்கம், 'இருவிலங்கு என்ற தலைப்பில் இருக்கிறது. அதுவே நூலுக்குப் பெயராகவும் அமைகிறது. முருகன் பிரமனைத் தளையிட்டுச் சிறையிட்டான் என்ற கந்தபுராணக் கதை அவன் பிறவியைப் போக்கும் பெருமான் என்ற கருத்தையே விளக்குகிறது என்பதை இந்தப் பாட்டுக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. அடுத்த பாடலிலும் நான்முகன் வருகிறான். ஆனால் அதில் அவன் படைப்புத் தொழில் செய்பவன் என்ற வகையில் ஒரு குற்றச் சாட்டுக்கு ஆளாகிறான். செங்கோட்டு வேலவனைத் 125