பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம் விடுவது வேறு. குடத்தில் நீரை விட்டால் குடம் நிரம்பியும் இருக்கலாம்; அரைகுறையாகவும் இருக்கலாம். மொண்டால் நிச்சயமாகக் குடம் நிரம்பிவிடும். அப்படி இறைவனுடைய திருவடிப் பேரெழிலில் கண்ணையும் கருத்தையும் மூழ்க அடிக்க வேண்டும். வேறு ஒன்றுக்கும் அவற்றில் இடம் இருக்கக்கூடாது. அந்தப் பெருமானுடைய திருவடியை மொண்ட பிறகு அநுபவம் உண்டாகும். கண்ணினாலே கண்டு, கருத்தினாலே உணர்வத னால் அந்த அநுபவம் ஏற்படும். சுந்தரர் அதுபவம் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவனுடைய காட்சியைக் கண்டவுடன் பேரானந்தப் பெருக்கு விளைந்ததாம். அந்த நாயனார் தில்லையில் திருக்கூத்தாடும் நடராசப் பெருமானைத் தரிசித்தார். கண்ணாலே கண்டு அண்டிமொண்டார். பின்பு ஆனந்தத்தை உண்டார். இதனைச் சேக்கிழார் பெருமான் சொல்கிறார். 'ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும் திருந்துசாத்துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்." மாறிலாத மகிழ்ச்சியில், பேரின்ப அநுபவ வெள்ளத்தில், திளைத்து இன்புற்ற சுந்தரருக்கு இந்திரியங்களை அடக்கிய சமாதி நிலையில் எத்தகைய இன்பம் உண்டாகுமோ அத்தகைய இன்பம் உண்டாயிற்று. இது வருவதற்குத் தொடக்கமாக இருந்தது காட்சி. காது கேளாமல் இருந்தால் செவிடு என்று சொல்கிறோம். அவனைக் காதில்லாதவன் என்றும் சொல்வதுண்டு. தோலினால் அமைந்த காது இருந்தாலும் கேட்கின்ற தன்மை இல்லாவிட்டால் காது இல்லாதவன் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. காதென்னும் உறுப்பு இருந்தாலும் கேளாத நிலை இரண்டு விதத்தில் வரும். இயற்கையாகச் செவிடாக இருப்பவனுக்குக் 1.89