பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பாரிசாதப் போர் மறுநாள் காலை, கண்ணபிரான் எழுந்து நீராடி ஆடை அணிகள் அணிந்துகொண்டு பாரிசாதத் தருவைக் கொண்டு வரப் புறப்பட்டான். கருடனை நினைத்தவுடன் அவன் வர, அந்த வாகனத்தின்மேல் ஏறிக்கொண்டு தன் அருகில் சத்தியபாமையை வைத்துக்கொண்டு புறப்பட்டான். பாரிசாத மரம் தேவலோகத்தில் அமராவதியில் இருக்கிறது. கருட வாகனத்தின்மேல் சத்தியபா மையுடன் கண்ணபிரான் தேவலோகத்தை அடைந்தான். அவன் வருவதை அறிந்து இந்திரன் பலவகையான விருதுகளுடன் சென்று வரவேற்று உபசரித்தான். கந்தருவர், கின்னரர், இயக்கர், கிம்புருடர், வித்தியாதரர் முதலிய பலரும் வந்து வரவேற்றார்கள். நாரதர் முதலியவர்கள் வீணை வாசித்தனர். யாவரும் புகழ் சொல்லி ஏத்தினர். கண்ணபிரானை வரவேற்று அவனை வீதி வழியே வலமாக அழைத்துச் சென்று தன் அரண்மனையைச் சேர்ந்தான் இந்திரன். சத்தியபாமையை இந்திராணி தன் அந்தப் புரத்திற்கு அழைத்துச் சென்று நல்ல ஆதனத்தில் இருத்தி உப சாரம் செய்தாள். பின்னர் அவர்கள் இரண்டு பேரும் சொக்கட்டான் விளை யாடினார்கள். அந்த விளையாட்டில் வெல்பவர்களுக்குத் தோற் பவர்கள் இன்னது கொடுக்க வேண்டுமென்று பணயம் வைத் தார்கள். "நான் தோற்றால் பாரிசாத மலரைத் தருவேன்' என்றாள் இந்திராணி. 'நான் தோற்றால் கண்ணபிரான் தந்த சமந்தக மணியை உனக்குத் தருவேன்' என்று சத்தியபாமை சொன்னாள். இருவரும் உட்கார்ந்து சொக்கட்டான் பலகையை வைத்துக் காய்களை எறிந்து ஆடத் தொடங்கினார்கள். அந்த ஆட்டத்தில் இந்திராணி தோல்வி அடைந்தாள். சத்தியபாமை வெற்றி பெற் றாள். முன்னாலே பந்தயம் பேசிக்கொண்டபடி சத்தியபாமை தன்னைச் சார்ந்த சிலரை ஏவிப் பாரிசாத மலரைப் பறித்து வரும் படி அனுப்பினாள். ஆனால் பாரிசாத மரத்தைச் சுற்றிக் காவல் இருந்தவர்கள் இவர்களை மரத்தின் அருகில் போகவிடாமல் விரட்டி அடித்தார்கள். "இந்திராணி சூடுகின்ற பாரிசாத மலரைப் பூவுலகத்தில் பிறந்தவர்கள் சூடிக்கொள்ள இயலுமோ?' என்று கூறி விரட்டினார்கள். இவர்கள் திருப்பி வந்து சத்தியபாமையிடம் நடந்ததைச் சொல்ல, அப்பெருமாட்டி கண்ணபிரானை அழைத்து வரச் சொன்னாள். 2O6