பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலம்புரியும் கிண்கிணியும் அதுகேட்ட கண்ணபிரான் மகிழ்ச்சி அடைந்தான். 'பாரிசாத மரத்தைப் பெயர்த்துச் சத்தியபாமையின் வீட்டு முற்றத்தில் நடுவதாக வாக்களித்து வந்தோம்; அதனைக் காரணம் இல்லாமல் செய்வது முறை அன்று. ஆகையால் இப்படி ஒரு நிகழ்ச்சி வந்து சேர்ந்தது நல்லதாயிற்று' என்று அவன் உவகை அடைந்தான். உடனே சத்தியபாமையை அழைத்துக் கொண்டு பாரிசாத மரம் இருந்த இடத்தை அடைந்தான். அங்கே காவல் இருந்த மகளிர்கள் எதிர்த்தார்கள். கண்ணன் மரத்தைப் பறித்து எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவனை மேற்செல்லவிடாதபடி பலர் அவனைத் தடுத்துப் பொருதார்கள். எல்லோரும் ஆயுதங்களுடன் நின்று போர் செய்தனர். அவர்களுடன் ஆயுதம் தாங்கிப் போரிடு வது நல்லது அல்ல என்று எண்ணிய கண்ணன் தன்னுடைய கரத்தில் உள்ள வலம்புரிச் சங்கத்தை எடுத்து ஊதினான். சங்கம் வாத்தியமானாலும் திருமாலின் கையில் ஐந்து ஆயுதங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. ஆயுதம் பகைவர்களை மோதி வெற்றி பெறுவது. சங்கு ஊதி வெற்றி பெறுவது. கண்ணபிரான் தன் சங்கத்தை ஊதினவுடன் அந்த ஒலியினால் எதிர்த்தவர்கள் அத்தனைபேரும் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார்கள். கருட வாகன்த்தின்மேல் மரத்தை வைத்துக் கொண்டு சத்தியபாமை யுடன் மீண்டும் துவாரகைக்கு வந்து சேர்ந்தான். 'கடமுறு வெங்கரி இறையுடன் அமரர்கள் கணைகள் பொழிந்திடமால் படியுயர் மால்வரை திகழ வயங்கிய பணிலம் முழக்கிடவே கடலர வம்திசை யுறுகரி யஞ்சின கமலன் நடுங்கினன்வான் வெடிபடு காலம்இ தாமென விபுதர்கள் வெருவி விழுந்தனரால்.” கண்ணன் தான் கொணர்ந்த பாரிசாத மரத்தைச் சத்திய பாமையின் மனையில் கொண்டுவந்து நட்டான். இதற்குமேலும் ஒரு கதையுண்டு. சத்தியபாமையின் முற்றத்தில் நட்ட அந்த மரம் நன்றாக வளர்ந்து பூத்துக் குலுங்கியது. ஆனால் அது சற்றே வளைந்து பூவையெல்லாம் ருக்மிணியின் மாளிகையில் உதிர்த்தது என்று சொல்வது உண்டு. 1. ஐயங்கார் பாகவதம், பாரிசாதப்படலம், 67 2Oア