பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 (தெள்ளி யுண்ணும் தினை வளரும் கொல்லையில் கிளிபோல இருந்து காவல் செய்தவளும் கள்ளமுடைய குறக்குலச் சிறுமி என்று சுட்டும்வண்ணம் இருந்தவளுமாகிய வள்ளி நாயகியை விரும்பி வலிந்து சென்று திருமணம் புரிந்து கொண்ட முருகனுடைய திருவடியை விரும்பாமல் இருக்கிறாயே! சிறிய வள்ளையிலையைப் போன்ற காதை மோதித் துள்ளுகின்ற கெண்டையைப் போன்ற மாதர் கண்களையும், கோவைப் பழம்போன்ற இதழையும், வஞ்சகமான சொற்களையும், விரிவான முத்துப் போன்ற புன்னகையையும் விரும்பிக் காமம் கொண்டு நிற்கும் நெஞ்சமே! தெள்ளுதல் - மாவைத் தெள்ளுதல். ஏனல் - தினைக் கொல்லை. கள்ளர் என்பது குறவருக்கு ஒரு பெயர். வள்ளை, கெண்டை, தொண்டை: உவம ஆகுபெயர்கள்; அவை முறையே பெண்களின் காதையும் கண்ணையும் வாயிதழையும் குறித்தன. தோதகம் - வஞ்சனை 'மாதர்கள் தோதக லீலை நிரம்பி என்பது திருப்புகழ். வித்தாரம் - விரிவு. மூரல் - புன்னகை. "நெஞ்சே வேட்டிலையே; இனி யான் என் செய்வேன் என்று இரங்கியபடி) பெண்களை நிமிர்ந்து பார்த்துக் காமம் கொள்ளாமல் இறை வனைப் பணிந்து பார்த்துப் பக்தி கொள் என்பது கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் 94ஆவது பாடல். 234