பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதியும் விதியும் உயிரும் விதியும் 'எமக்கு இதுதான் ஊர், இவர்தாம் சொந்தக்காரர் என்ற வேறுபாடு இல்லை. எல்லாம் எம் ஊரே. எல்லாரும் எமக்கு உறவினர்களே. யாம் பெறுகிற தீமையும், யாம் அடைகிற நன்மையும் பிறர் காரணமாக வந்தன என்று எண்ணுவது தவறு. யாம் வருந்துவதும் வருத்தம் தணிவதும் மற்றவர்களாலே வருவன அல்ல; அவற்றுக்குக் காரணம் வேறு ஒன்று. செத்துப் போவதுகூடப் புதிய காரியம் அன்று. அது இயற்கையாக அமைந்ததுதான். வாழ்வது; மிகவும் இனிமை என்று எண்ணி மகிழ்ச்சி பெறும் இயல்பு |எம்மிடம் இல்லை. ஏதாவது தீங்கு வந்துவிட்டால் கசப்புக்கொண்டு இது மிகவும் கெட்டது என்று சொல்லமாட்டோம். பெரியவர்கள் தம்முடைய அநுபவத்தி னாலும், அறிவினாலும் நமக்குப் பலவற்றைச் சொல்லியிருக் கிறார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானது விதி செய்யும் காரியம். அதுவே இன்பம் துன்பம், விருப்பு வெறுப்பு ஆகிய பல வகையான அநுபவங்களைப் பெறச் செய்கிறது. மலைப் பிராந்தியங்களில் மின்னல் மின்னி இடி இடித்துப் பெரிய மழை பெய்கிறது. அந்த மழை மலையிலிருந்து அருவியாக வந்து கரையை மோதிக் கொண்டு சம பூமியில் வந்து பெரிய ஆறாக ஒடுகிறது. புது வெள்ளத்தின் ஒட்டம் வேகமாக இருக்கிறது. அந்த ஓட்டத்தில் ஒரு தெப்பக் கட்டையைப் போட்டால் அது ஆற்றின் வழியே செல்லும். கொஞ்சம் வேகம் குறைந்தால் மெல்லப் போகும். வளைந்து போனால் வளைந்து போகும். எந்தத் திசையில் ஆறு போகிறதோ அந்தத் திசையில் புணை போகும். அது எதிர் நீச்சுப் போட்டுச் செல்வது கிடையாது. ஆற்று நீர் போகின்ற வழியே அந்தத் தெப்பக் கட்டையும் மிதந்து செல்லும். அதுபோல உயிரானது வாழ்க்கை என்னும் நதியில் விதி என்னும் ஒட்டத்திற்கு ஏற்பப் போய்க் கொண்டிருக்கிறது. அந்த விதிதான் எல்லாவற்றையும் செய்கிறது. இதனை அறி வுடையவர்களின் உபதேசங்களால் யாம் அறிந்திருக்கிறோம். ஆகவே, பெரியவர்களைப் பார்த்து, அவர்கள் மிகப் பெரியவர்கள், பெரிய காரியங்களைச் செய்தவர்கள் என்று யாம் வியக்க மாட்டோம். அது நியதி. ஒருகால் அவர்களை வியந்தாலும் சிறிய வர்களைப் பார்த்து, அவர்கள் சிறிய செயல்களைச் செய்தார்கள் 297