பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு முழு மனத்துடன் நம்புகிறவர்களுக்குக் கைமேல் பலன் கிடைக் கிறது என்றே தெரியும். எளிதில் கிடைப்பதனால் உண்மையான பொருளுக்கு மதிப்பு கிடையாதா? தெருவில் ஒரு பைசாக் கிடக்கிறது. அதற்குப் பைசா மதிப்புத்தான். அதே இடத்தில் பவுன் கிடக்கிறது. சாலையில் கிடந்ததனால் அது தன் மதிப்பை இழந்துவிடாது. ஆனால் சாதாரணமாகச் சாலையில் பவுன் கிடைப்பதில்லை. கிடப்பதாக இருந்தால் அதனுடைய மதிப்புச் சிறிதும் தாழ்வது இல்லை. பொதுவாக எளிதில் கிடைப்பது விரைவில் போகும் என்றும், நீண்டு முயன்று கிடைப்பது நெடுங்காலம் நிற்கும் என்றும் சொன்னாலும் அந்த விதிக்கு விலக்காகப் பல நிகழ்ச்சி கள் நிகழ்வது உண்டு. ஆண்டவனுடைய திருவருள் அத்தகையது. உண்மையான நம்பிக்கை உள்ளவர்களுக்கு எளிதில் கிடைக்கின்ற அது, எல்லாக் காலத்திற்கும் நலம் செய்வதாக இருக்கிறது. ஆகையால் இறைவனிடத்தில் முழு நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். நாம் மக்களிடத்திலே ஓரளவுதான் நம்பிக்கை வைத்திருக் கிறோம். அவர்களால் நமக்கு நலம் இருக்கும் மட்டும் நம்பிக்கை. சில சமயங்களில் அதுவும் உறுதியாக இருப்பது இல்லை. கண்ணுக்குக் கண்ணாக நம்முடன் வாழ்கிற மக்களிடத்தில்கூட ஆழ்ந்த நம்பிக்கை உண்டாவது அரிதானால், கண்ணால் காணாத பொருளாக உள்ள கடவுளிடம் எளிதில் வந்துவிடுமா? வந்து விட்டாலே அதனுடைய பயன் உடனே கிடைக்கும்; உறுதியாகக் கிடைக்கும்; பல காலத்திற்கும் கிடைக்கும். ஆகையால்தான் அருணகிரியார் முருகப் பெருமானை வாழ்த்துகின்ற தொண்டு கைவரும் தொண்டு என்று உறுதியாகக் கூறுகிறார். வாழ்த்தும் தொண்டு அத்தகைய தொண்டு எவ்வாறு நிகழும் என்பதையும் அருணகிரியார் சொல்கிறார். 'பல இடங்களில் நீங்கள் பெற்ற இன்ப அநுபவத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். உடம்பை மறந்து நிற்கும் நிலை பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த அநுபவங் களை அடைவதற்கு நீங்கள் என்ன தவம் செய்தீர்கள்? என்ன யோகம் செய்தீர்கள்? என்ன ஜபம் செய்தீர்கள்?' என்று நாம் 55